ஹோம் /நியூஸ் /சென்னை /

'பைக்ல ஏறு'.. ஐஐடி மாணவிக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை.. இளைஞர் கைது!

'பைக்ல ஏறு'.. ஐஐடி மாணவிக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை.. இளைஞர் கைது!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மாணவி அளித்த புகாரின் பேரில், போலீசார் வசந்த் எட்வர்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras] | Chennai | Tamil Nadu

  சென்னை ஐஐடியில் மாணவியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரிடம் வேளச்சேரியை சேர்ந்த வசந்த் எட்வர்ட் (30) என்பவர் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.

  பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததுடன், தனது இருசக்கர வாகனத்தில் தவறான நோக்கத்தில் கட்டாயப்படுத்தி

  ஏறச்சொல்லி உள்ளார்.

  இதையும் படிங்க | இளம்பெண் கழுத்தை நெறித்து கொலை: தாயின் கள்ளக்காதலனுக்கு போலீசார் வலைவீச்சு..!

  இதனால் அச்சமடைந்த பெண் கூச்சலிடவே அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இது குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில், போலீசார் வசந்த் எட்வர்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai, Chennai IIT, Crime News, Sexual abuse