Home /News /chennai /

பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் கண்காணித்து நடவடிக்கை: சென்னை கமிஷனர் எச்சரிக்கை

பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் கண்காணித்து நடவடிக்கை: சென்னை கமிஷனர் எச்சரிக்கை

பிரதமர் வரும் அனைத்து இடங்களிலும் கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வரும் அனைத்து இடங்களிலும் கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வரும் அனைத்து இடங்களிலும் கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடியின் சென்னை வருகையை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால், பதிவுகளின் தன்மையை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

    சென்னை ஜவர்கலால் நேரு விளையாட்டு அரங்கில் 44வது செஸ் ஒலிம்பியர் போட்டியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 28ஆம் தேதி வருகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியை ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் வருகை தந்தார்,

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பானது ஏழு மடங்கு அதிகரிக்கப்படும்.

    பிரதமர் வரும் அனைத்து இடங்களிலும் கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும், பாதுகாப்பு ஏற்பாடு கருதி பொதுமக்கள் வழக்கம்போல் செல்லலாம் குறிப்பாக நேரு விளையாட்டரங்கம் அருகில் உள்ள சாலைகளில் சில போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 54 ரவுடிகளை கைது செய்துள்ளோம், மேலும் அனைத்து பகுதிகளிலும் கண்காணித்து அனுப்பிய முக்கிய பெருந்து நிலையம் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் காவல் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,

    மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டு இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தாலும் அவர்கள் கண்காணிக்கப்பட்டு பதிவின் தன்மையை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai, Chess Olympiad 2022, PM Modi

    அடுத்த செய்தி