ஹோம் /நியூஸ் /சென்னை /

“ஆங்கிலேயரால் கல்வியா? அவங்கள பார்த்தா பரிதாபமா இருக்கு..” - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

“ஆங்கிலேயரால் கல்வியா? அவங்கள பார்த்தா பரிதாபமா இருக்கு..” - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

ஆர்.என்.ரவி

ஆர்.என்.ரவி

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் படைக்கப்பட்டிருக்கும் இலக்கியங்களும், ஆன்மீகப் படைப்புகளும் பிரமிக்க வைப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஆங்கிலேயர் இந்த மண்ணை ஆட்சி செய்திருக்காவிடில் நம்மில் பலர் கல்வி கற்றிருக்க முடியாது என்று பேசுபவர்களை பார்த்தால் பரிதாபமாக இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் தமிழ்நாடு ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி வளாகத்தில் புதிய அரங்கை குத்துவிளக்கு ஏற்றி தமிழக ஆளுநர் திறந்து வைத்தார். விழாவில் பேசிய ஆளுநர், “பாரதம் என்ற கட்டமைப்பை உடைப்பதற்கு, அழிப்பதற்கு பல முயற்சிகள் நடைபெற்றது. ஆங்கிலேயர்கள் அதை அழிக்க நினைத்தனர்.

ஆங்கிலேயர் கொண்டு வந்த பாடத்திட்டத்தின் கீழ் படித்த பலரும் பெரிய பதவிகளில் இருக்கும் பலரும் இன்றளவும் காலனி ஆதிக்க மனப்பான்மையிலேயே தாழ்வு மனநிலையிலேயே இருக்கிறார்கள். அவர்களுள் பலர் ஆங்கிலேயர்கள் ஆட்சியை கெடுதலிலும் நன்மை என்று நினைக்கிறார்கள். ஆங்கிலேயர் இந்த மண்ணை ஆட்சி செய்திருக்காவிடில் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பலர் கல்வி கற்றிருக்க முடியாது என்று ஒருவர் பேசியதை செய்தித்தாளில் படித்தேன் இவ்வாறு பேசுபவர்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் படைக்கப்பட்டிருக்கும் இலக்கியங்களும், ஆன்மீகப் படைப்புகளும் பிரமிக்க வைக்கிறது. இந்த பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே ரிஷிகளாலும் ஆன்மீக இலக்கியங்களாலும் பாரதம் உருவாக்கப்பட்டது.  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் படைக்கப்பட்டிருக்கும் இலக்கியங்களும், ஆன்மீகப் படைப்புகளும் பிரமிக்க வைப்பதாகவும் தெரிவித்தார். மேலும்,

‘செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற் சிந்தை ஒன்றுடையாள்’

வேதம் நிறைந்த தமிழ்நாடு உயர் வீரம் நிறைந்த தமிழ்நாடு என அன்றைக்கு மகாகவி பாரதியார் குறிப்பிட்டுள்ளார். ஒரே பாரதம் என்பதை பலர் சிதைக்க முயல்கின்றனர்” என குறிப்பிட்டார்.


First published:

Tags: BRITISH RULE, Education, RN Ravi