Home /News /chennai /

செஸ் போட்டியில் வென்றவர்களை விட நான் மகிழ்ச்சியாக உள்ளேன்: முதல்வர் ஸ்டாலின்

செஸ் போட்டியில் வென்றவர்களை விட நான் மகிழ்ச்சியாக உள்ளேன்: முதல்வர் ஸ்டாலின்

செஸ் போட்டியில் வென்றவர்களை விட நான் மகிழ்ச்சியாக உள்ளேன்: முதல்வர்

செஸ் போட்டியில் வென்றவர்களை விட நான் மகிழ்ச்சியாக உள்ளேன்: முதல்வர்

அன்புள்ள வெளிநாட்டு வீரர்களே சென்னையை மறந்துவிட வேண்டாம்; உங்களுக்காக ஒரு சகோதரன் இங்கே இருக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    செஸ் போட்டியில் வென்றவர்களை விட நான் மகிழ்ச்சியாக உள்ளேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சென்னை, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28ம் தேதி தொடங்கி கடந்த 10-நாட்களுக்கு மேல் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடந்து முடிந்தது.

    இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.

    இந்த நிறைவு விழாவில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. செஸ் ஒலிம்பியாட் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

    இந்த செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் வண்ணமயமான ஒளி, ஒலி அமைப்புகளைக் கொண்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, இறுதியாக உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் அனைவரும் மெச்சத்தக்க வகையில் நடந்து முடிந்துள்ளது. 4 மாதங்களில் பன்னாட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, வியக்கும் வண்ணம் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது.

    அமைச்சர் உட்பட அதிகாரிகள் வரை அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளனர். வெளிநாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் ஏற்பாடுகள் குறித்து பாராட்டி வருகின்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களை விட நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

    விளையாட்டுத்துறை முன்னிலும் அதிக பாய்ச்சலுடன் செயல்படும், எதிலும் வெற்றி தோல்வி முக்கியமல்ல, பங்கேற்பே முக்கியம். அன்புள்ள வெளிநாட்டு வீரர்களே சென்னையை மறந்துவிட வேண்டாம்; உங்களுக்காக ஒரு சகோதரன் இங்கே இருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும் பேசிய அவர், ஒலிம்பிக்கில் தங்கவேட்டை என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. அதன்படி, 50 விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து அவர்களை 4 ஆண்டுகளில் மெருகேற்ற உள்ளோம். தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு வெளிநாடுகளை சேர்ந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மினி விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும் என்றார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chess Olympiad 2022, CM MK Stalin, MK Stalin

    அடுத்த செய்தி