ஹோம் /நியூஸ் /சென்னை /

“நான் ஒரு கிறிஸ்தவன்.. இதை சொன்னா சிலருக்கு எரியும்..” - அமைச்சர் உதயநிதி

“நான் ஒரு கிறிஸ்தவன்.. இதை சொன்னா சிலருக்கு எரியும்..” - அமைச்சர் உதயநிதி

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

நான் கிறிஸ்தவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் - கிறிஸ்துமஸ் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தானும் ஒரு கிறிஸ்தவன் என மேடையில் உரையாற்றிய போது குறிப்பிட்டார்.

சென்னை மண்ணடி, பிரகாசம் சாலையில் அமைந்துள்ள டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு திமுக சார்பில் 2,000 பேருக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் உதயநிதி, பொது மக்களுக்கு புத்தாடைகள், உணவு பொருட்கள் மற்றும் கிறிஸ்மஸ் பரிசுகளை வழங்கினார். பின்னர் மேடையில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி, “நான் கிறிஸ்தவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். நான் இஸ்லாமியரும் கூட. நான் படித்தது டான் பாஸ்கோ பள்ளியில் தான். பட்டம் பெற்றது லயோலா கல்லூரி. நான் காதலித்து மணந்தது ஒரு கிறிஸ்தவ பெண் எனவே அந்த உரிமையில் இங்கே வந்து பேசுகிறேன்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நான் கிறிஸ்தவன் என சொல்வதும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் அல்லேலூயா என்று கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதும் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும் என குறிப்பிட்டார்.

First published:

Tags: Christmas, Minister Sekar Babu, Udhayanidhi Stalin