Home /News /chennai /

புல்லட் மோகத்தால் மனைவி நகையை திருடி நாடகமாடிய கணவன்.. கம்பி எண்ணும் பரிதாபம்

புல்லட் மோகத்தால் மனைவி நகையை திருடி நாடகமாடிய கணவன்.. கம்பி எண்ணும் பரிதாபம்

மனைவி நகையை திருடி நாடகமாடிய கணவன்

மனைவி நகையை திருடி நாடகமாடிய கணவன்

Chennai | சொந்த வீட்டிலேயே திருடிய நகையை விற்று ஆன்லைன் ரம்மி,மெரினா கடற்கரை, என உல்லாசமாக செலவழித்து சுற்றித்திரிந்த கணவனை போலீசார் கைது செய்தனர்..

சென்னை எழும்பூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஷீத்(27).இவர் துபாயில் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் சென்னை வந்த அவருக்கு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. மனைவி கிண்டியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி மாலை அப்துல் ரஷீத் தனது மனைவியிடம் நமது வீட்டின் பீரோவை உடைத்து திருடர்கள் நகையை திருடி சென்று விட்டதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து அவரது மனைவி வீடு திரும்பி பார்த்தபோது நகைகள் அனைத்தும் திருடு போயிருப்பதும், பீரோ உடைக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து அப்துல் ரஷீத் மற்றும் அவரது மனைவி எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் எழும்பூர் போலீசார் சம்பவ இடம் விரைந்து பார்த்தனர். மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது 25ஆம் தேதி அப்துல் ரஷீத் வீட்டின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் எந்த ஒரு நபரும் வரவில்லை என்பது தெரிய வந்தது.

அப்துல் ரஷித்து தான் இரண்டு முறை தனது வீட்டிற்கு சென்று வந்துள்ளார் எனவும் சிசிடிவி பதிவுகள் காட்டிக் கொடுத்தது. இதனையடுத்து எழும்பூர் போலீசார் அப்துல் ரஷீத்திடம் கிடுக்குபிடி  விசாரணை மேற்கொண்ட போது தானே நகையை திருடி திருடர்கள் திருடியது போல் நாடகமாடியதை ஒப்புக் கொண்டுள்ளார்.போலீசாரின் விசாரணையில், தமது நண்பர்கள் அனைவரும் புல்லட் பைக் வைத்திருப்பதால் தானும் புல்லட் பைக் வாங்க வேண்டும் என நினைத்து நகையை திருடியதாக அப்துல் ரஷீத் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆபாச வீடியோ சாட்டிங்.. பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது


திருடிய நகைகளை தனது உறவினரான முகமது சாய் என்பவரிடம் கொடுத்து ரூபாய் 2 லட்சத்து 80 ஆயிரத்திற்கு நகையை விற்பனை செய்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ரூபாய் 2 லட்சத்து 80 ஆயிரம் பணம் கையில் வந்தவுடன் அதனை உல்லாசமாக செலவழித்து வந்ததும் அந்த பணத்தை கொண்டு ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததும் தெரிய வந்தது.

மேலும் துபாயிலிருந்து வந்தவுடன் அப்துல் ரஷீத் ஆன்லைன் உணவு டெலிவரி வேலைக்கு சென்று வந்ததும் தற்போது அவர் வேலைக்கு சரிவர செல்லாமல் இருந்து வந்ததும் தெரியவந்தது. ஆனால், தினமும் வேலைக்கு செல்வது போன்று வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு நேராக மெரினா பீச்சுக்கு சென்று நேரத்தை போக்குவதும் பின்பு மாலையில் வீட்டிற்கு வருவதுமாக இருந்து வந்துள்ளார்.இதனையடுத்து அப்துல் ரஷீத் மற்றும் அவரது நண்பரான முகமது சாயி ஆகிய இருவரையும் கைது செய்த எழும்பூர் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Chennai, Crime News, Theft

அடுத்த செய்தி