Home /News /chennai /

மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த கணவர் தற்கொலை முயற்சி... ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி...

மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த கணவர் தற்கொலை முயற்சி... ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி...

.

.

Chennai | கணவன் மனைவி தகராறில் புடவையால் மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு தானும் மாத்திரை சாப்பிட்டு தள்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் அடுத்த பழைய கரிக்காட்டுக்குப்பம் பகுதியில் ரங்கராஜன் என்பவருக்கு சொந்தமான ராகவேந்திரா பண்ணை வீடு உள்ளது.
    அந்த பண்ணை வீட்டினை கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த பரத்துடு(52) என்பவர் குடும்பத்தோடு தங்கி பராமரித்து வந்துள்ளார்.

    கணவன் மனைவிக்கிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு கணவன் மனைவிக்கு இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தகராறில் புடவையால் மனைவி சுஜாதா(48) கழுத்தை நெறித்து கணவர் கொலை செய்துள்ளார்.

    மனைவியை கொலை செய்துவிட்டு பின்னர் தானும் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிய நிலையில் இருந்த தந்தையை பார்த்த அவரது மகன் வெங்கடஷ் உடனே ஆம்புலன்ஸ் வரவைத்து அருகில் உள்ள ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

    Also see... காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணிற்கு கருகலைப்பு செய்த கணவர் கைது

    அங்கு அவர் முதலுதவி பெற்று மேல்சிகிச்சைக்காக சென்னை இரயபேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சுஜாதா உடலை கைபற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக சென்னை இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து இச்சம்பவம் குறித்து கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    செய்தியாளர்:  ப.வினோத்கண்ணன், இசிஆர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai, Crime News, Murder, Suicide attempt

    அடுத்த செய்தி