Home /News /chennai /

மனைவியின் மீது சந்தேகம்... அடித்து கொலை செய்த கணவன் - சென்னையில் பகீர் சம்பவம்

மனைவியின் மீது சந்தேகம்... அடித்து கொலை செய்த கணவன் - சென்னையில் பகீர் சம்பவம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

chennai | மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சதேகத்தால், அவரை அடித்து கொலை செய்த கணவரை சூளைமேடு போலீசார் கைது செய்தனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
சென்னை சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனி(31). இவர் 10 வருடத்திற்கு முன்பு பாரதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்த பழனி கடந்த இரு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இதனால் மனைவியான பாரதி நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள டீக்கடையில் கடந்த ஒரு மாதமாக பணிபுரிந்து வந்தார். இதனால் மனைவி பாரதி மீது சந்தேகம் அடைந்த பழனி வேலைக்கு செல்லக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மனைவி செல்லும் இடத்தினை பின் தொடர்ந்து செல்வதும், தகராறில் ஈடுபட்டு மனைவியை தாக்கியும் வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் சந்தேம் ஏற்பட்டு மனைவி வேலை செய்யும் கடைக்கு பழனி சென்று மூன்றாவது மாடி கழிவறைக்கு சென்ற மனைவி பாரதியை பின் தொடர்ந்துள்ளார். அங்கு மீண்டும் தகராறில் ஈடுபட்டு தாக்கி கீழே தள்ளி உள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த பாரதியை அருகிலிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Also see... காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணிற்கு கருகலைப்பு செய்த கணவர் கைது

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பாரதி இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் கொலை வழக்குபதிவு செய்து பழனியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பழனியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai

அடுத்த செய்தி