ஹோம் /நியூஸ் /சென்னை /

முதல் மனைவியுடன் சண்டையிட்ட 2-வது மனைவி :  ஆத்திரத்தில் கரண்ட்ஷாக் கொடுத்து கொலை செய்த கொடூர கணவன்!

முதல் மனைவியுடன் சண்டையிட்ட 2-வது மனைவி :  ஆத்திரத்தில் கரண்ட்ஷாக் கொடுத்து கொலை செய்த கொடூர கணவன்!

ஷாஜகான்

ஷாஜகான்

முதல் மனைவி  வீட்டிற்கு சென்று வருவதை கேட்டு சண்டையிட்ட  இரண்டாவது மனைவியை தலையனை வைத்து அழுத்தி கரண்ட்ஷாக் கொடுத்து கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் வசித்துவருபவர் ஷாஜகான்(47). தோல் ஆடைகளை கொண்டு டெய்லர் வேலை செய்வபரான இவருக்கு ஜெபினா என்ற பெண்ணிற்கும் திருமணமாகி இரண்டு பெண், ஒரு ஆண் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இதனிடையே வேலை பார்க்கும் இடத்தில் இவருக்கும் அசினா பேகம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு  இருவீட்டார் சம்மதத்தோடு  கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னராக திருமணம் செய்துள்ளனர்

  இந்நிலையில் ஷாஜகான் தனது முதல் மனைவியான ஜெபினாவை மட்டுமே கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 27ஆம் தேதி வீட்டிற்கு வந்த ஷாஜகானிடம் இரண்டாவது மனைவி அசினா இதனை கேட்டு சண்டையிட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஷாஜகான் அசினா தூங்கும்போது தலையனையை எடுத்து முகத்தில் அழுத்தியுள்ளார். பின் சால்டிங் மிஷன் எனப்படும் எலெக்ட்ரிஷன் பொருளை வைத்து கையில் கரண்ட் ஷாக் வைத்து கொலை செய்துள்ளார்.

  Read More: Gold Rate: தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்றைய நிலவரம்!

  இதையடுத்து அசீனாவின் தாயார் வீட்டிற்கு சென்று அசினா  ஷாக் அடித்து இறந்து விட்டதாக கூறி நாடகமாடியுள்ளார். இதில் சந்தேகமடைந்த அசினாவின் தாயார் ஷாபிரா பேகம்(60) வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியுள்ளார். தற்கொலை வழக்காக பதியப்பட்டிருந்த இவ்வழக்கு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. மருத்துவ பிரேத பரிசோதனையில் இயற்கைக்கு முரணான மரணம் என தெரிய வரவே ஆய்வாளர் தவமணி ஷாஜகானை நேரில் அழைத்து விசாரணை செய்துள்ளார்.

  இதில் முதலில் ஒப்பு கொள்ள மறுத்த ஷாஜகான் போலிசாரின் விசாரணையில் மனைவியை கொண்றதை ஒப்புக்கொண்டார். தன் மீது யாருக்கும் சந்தேகம் வந்துவிட கூடாது என்பதற்காக மனைவி ஷாக் அடித்து இறந்ததுபோல் காண்பிக்க சால்டிரிங் மெஷின் வைத்து கையை சுட்டதாகவும் கூறினார். போலீசாரின் தீவிர விசாரணையிலும் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் மனைவியை கொண்ற கணவன் தற்போது சிக்கியுள்ளார்.

  செய்தியாளர்: அசோக்குமார்

  Published by:Srilekha A
  First published:

  Tags: Chennai, Murder