ஹோம் /நியூஸ் /சென்னை /

காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்.. விசாரணையில் வெளியான திடுக் தகவல்

காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்.. விசாரணையில் வெளியான திடுக் தகவல்

ஆசிஃப், பிரியங்கா பாட்லா

ஆசிஃப், பிரியங்கா பாட்லா

Chennai Crime | சென்னையில் காதல் மனைவியை கணவன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆசிஃப்(43), பிரியங்கா பாட்லா(38). 10 ஆண்டுகளுக்கு முன்பாக இருவரும் காதலித்து மதம் மாறி திருமணம் செய்து கொண்டனர். இருவரின் திருமணத்தை இரு வீட்டாரும் எதிர்த்து வந்துள்ளனர். இருவரும் பட்டதாரிகள் என்பதால்  5 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்துள்ளனர்.

சென்னை முத்தியால்பேட்டை பகுதியில் வாடகை வீட்டில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு குடியேறியுள்ளனர். பின்பு ஆசிஃப் மயிலாப்பூர் ஆர்.கே சாலையில் உள்ள தனியார் வங்கியில் வேலைக்கு சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார். அதேபோன்று அவரது மனைவி பிரியங்கா பாட்லா போரூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலைக்கு சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று மதியம் கணவன், மனைவி இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது திடீரென பிரியங்கா பாட்லாவின்  அலறல் சத்தம் அக்கம்பக்கத்தினருக்கு கேட்டுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் இவர்கள் வீட்டை தட்டி பார்த்தபோது உள்பக்கமாக தாழ்த்தப்பட்டிருந்தது. சிறிது நேரம் கழித்து உடல் முழுவதும் ரத்தம் சொட்ட, சொட்ட கையில் காய்கறி வெட்டும் கத்தியோடு வெளியே வந்த ஆசிஃப் அக்கம்பக்கத்தினரை பார்த்து நான் என் மனைவியை கொன்று விட்டேன். தயவு செய்து போலீஸ்க்கு கால் செய்யுங்கள். எனது வாழ்க்கையே முடிந்துவிட்டது என கூறியுள்ளார்.

இதையும் படிங்க : தாயை கொன்று வீட்டில் புதைத்த மகன்.. விழுப்புரத்தில் அரங்கேறிய கொடூரம்

இதனைக்கேட்டு அதிர்ந்துபோன அக்கம்பக்கத்தினர் உடனடியாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த முத்தியால்பேட்டை போலீசார் ஆசிஃபை கைது செய்து கொலை செய்யப்பட்ட பிரியங்கா பாட்லாவின் உடலை உடற்குராய்வுக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் ஆசிஃபை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆசிஃப்-பிரியங்கா பாட்லாவுக்கு குழந்தை இல்லாததால் அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்துள்ளது என தெரியவந்தது. மேலும் பிரியங்கா பாட்லா, தான் பணிபுரியும் ஐடி நிறுவனத்தில் தன்னோடு பணிபுரியும் நபரோடு தகாத உறவில் இருந்ததாகவும், அதனை பலமுறை ஆசிஃப் கண்டித்ததாகவும், இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாகவும் தெரியவந்தது.

இந்நிலையில், இன்று மதியம் ஆசிஃப்பும், பிரியங்கா பாட்லாவும் வீட்டில் இருந்தபோது இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆசிஃப், பிரியங்கா பாட்லாவை அடித்துள்ளார். இதனால், கோபமடைந்த பிரியங்கா பாட்லா தான் வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறி தனது ஆடைகளை பேக்கில் எடுத்து வைத்து வீட்டை விட்டு வெளியே கிளம்பியுள்ளார்.

இதனால் பிரியங்கா பாட்லாவை தடுத்து நிறுத்திய ஆசிஃப் உள்பக்கமாக கதவை தாழிட்டுக்கொண்டு ஆத்திரத்தில் காய்கறி வெட்டும் கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக  ஆசிஃப்  வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க : கனமழையை எதிர்கொள்ள சென்னையில் முழு வீச்சில் ஏற்பாடுகள்.. தயார் நிலையில் 860 பம்புகள்

இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள ஆசிஃபிடம் முத்தியால்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Chennai, Crime News