ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னை: கல்யாண வீட்டில் பிரியாணி.. மாரடைப்பால் உயிரிழந்த மனைவி.. சோகத்தில் விபரீத முடிவெடுத்த கணவர்!

சென்னை: கல்யாண வீட்டில் பிரியாணி.. மாரடைப்பால் உயிரிழந்த மனைவி.. சோகத்தில் விபரீத முடிவெடுத்த கணவர்!

மாதிரி படம்

மாதிரி படம்

மனைவி உயிரிழந்த தகவலை கேட்ட கணவர் அதிர்ச்சியில் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

    சென்னையில், மாரடைப்பில் உயிரிழந்த மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் சோகத்தில் கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அயனாவரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர்கள் தம்புசாமி (53) - பவானி (47) தம்பதியினர்.

    பவானி நேற்று மாலை சூளைமேட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சி ஒன்றுக்கு உறவினர்களுடன் சென்று விட்டு அங்கு பிரியாணி சாப்பிட்டு வீடு திரும்பியுள்ளார்.

    அப்போது பவானி திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து பவானியை மீட்ட உறவினர்கள் அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த பவானியின் கணவர் தம்புசாமி, நேற்று இரவு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த போலீசார், தம்புசாமியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Chennai, Death