ஹோம் /நியூஸ் /சென்னை /

மாணவி பிரியா மரணம்: தமிழக அரசிற்கு மனித உரிமை ஆணையம் முக்கிய உத்தரவு!

மாணவி பிரியா மரணம்: தமிழக அரசிற்கு மனித உரிமை ஆணையம் முக்கிய உத்தரவு!

பிரியா

பிரியா

பிரியா உயிரிழந்ததையடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட இரு மருத்துவர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் 17 வயது கால்பந்து வீராங்கனை பிரியா. இவர் தனது காலுக்கு சிகிச்சை பெறுவதற்காகச் சென்ற நிலையில் மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்தார்.

  இதனையடுத்து தவறான சிகிச்சை அளித்த டாக்டர் ஏ.பால்ராம் சங்கர், டாக்டர் சோமசுந்தரம் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், பிரியா உயிரிழந்ததையடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட இருவரும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

  இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பிரியா மரணம் தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

  கால் வலிக்காக மாணவி பிரியா சென்றது முதல்... உயிரை பறித்த அறுவை சிகிச்சை வரை... நடந்தது என்ன? (news18.com)

  அந்த வகையில் இச்சம்பவம் தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு சுகாதார துறைக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல பிரியா மரணம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Chennai, Ma subramanian