ஹோம் /நியூஸ் /சென்னை /

கிராமப்புற மக்களுக்காக ரூ 51.50 லட்சம் செலவில் நடமாடும் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

கிராமப்புற மக்களுக்காக ரூ 51.50 லட்சம் செலவில் நடமாடும் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

நடமாடும் ஆம்புலன்ஸ்

நடமாடும் ஆம்புலன்ஸ்

ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களுக்கு சுகாதார சேவை வழங்குவதற்காகவோகார்ட் அறக்கட்டளையின் ரூ.51.50 லட்சம் செலவில் நடமாடும் மருத்துவ வாகனம் தொடங்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிண்டி HCFL நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வில் 51.50 லட்சம் செலவில் நடமாடும் மருத்துவ வாகனத்தை ராஜேஷ் லகோனி ஐஏஎஸ் உடன் இணைந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் தலைவரும் ஓய்வு பெற்ற ADGPயுமான எம்.பாலச்சந்திரன் IPS கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்காக நடமாடும் மொபைல் ஹெல்த் வேன்களை சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களுக்கு சுகாதார சேவை வழங்குவதற்காக வோகார்ட் அறக்கட்டளையின் ரூ.51.50 லட்சம் செலவில் நடமாடும் மருத்துவ வாகனத்தை கொடி அசைத்து துவங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் மகேந்திர நஹாடா HFCL Ltd. & நிர்வாக இயக்குநர் ஜி.எஸ்.நாயுடு - தலைமை இயக்க அதிகாரி, எச்டிஎல் லிமிடெட். கலந்ந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள 25 மில்லியன் இந்தியர்களுக்கு இலவச ஆரம்ப சுகாதார சேவையை வழங்குவதற்காக 1000 மொபைல் ஹெல்த் வேன்களை இயக்குதல் என் திட்டமிட்டு வோகார்ட் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.இதன் அடிப்படையில் சென்னையில் இரண்டாவது மருத்துவ நடமாடும் வாகனத்தை HCLF இனைத்து துவக்கி வைத்தனர்.

இதையும் படிங்க: 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றம்: யார் யாருக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு!!

ஒவ்வொரு வாகனத்திலும்  MBBS மருத்துவர் மற்றும் மருந்துகளுடன் முழுமையாக பொருத்தப்பட்ட ஒரு மொபைல் ஹெல்த் வேன், ADCR ( Awareness, Diagnosis, Cure, Referral) ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்குகிறது. இவ்வாறு புதிதாக தொடங்கப்பட்ட நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஆண்டுக்கு 25,000 நோயாளிகளின் குறைகளை தீர்க்கும் வகையில் செயல்படுகிறது.

First published:

Tags: Ambulance, Health