முகப்பு /செய்தி /சென்னை / துணை நகரங்கள் எல்லை வரையறை எவ்வளவு? - சிஎம்டிஏ திட்டத்தின் முழு தகவல்கள்..!

துணை நகரங்கள் எல்லை வரையறை எவ்வளவு? - சிஎம்டிஏ திட்டத்தின் முழு தகவல்கள்..!

துணை நகரங்கள் எல்லை வரையறை எவ்வளவு?

துணை நகரங்கள் எல்லை வரையறை எவ்வளவு?

Chennai News : சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிர்வாக எல்லையானது 1,189 சதுர கிமீ அளவில் இருந்து விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு கடந்த 2018ம் ஆண்டு வெளியானது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

வேலை வாய்ப்பு, வாழ்க்கை தரம் மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்பு வசதி காரணமாக சென்னை மாநகரில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக எல்லையானது 1,189 சதுர கிமீ அளவில் இருந்து விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு கடந்த 2018ம் ஆண்டு வெளியானது. இதுதொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு, விரிவாக்கத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை மாநகரத்தை 1,189 சதுர கி.மீட்டரில் இருந்து, 5,904 சதுர கி.மீட்டர் விரிவாக்கம் செய்ய முடிவெடுத்து, ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருமழிசை, மீஞ்சூர் ஆகிய இடங்களில் புதிய துணை நகரங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு துணை நகரத்துக்கான எல்லைகள், அதில் இடம் பெறும் பகுதிகளுக்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.

4 நகரங்கள், 12 நகராட்சிகள், 13 பேரூராட்சிகள், ஒரு சிறப்பு நிலை பேரூராட்சி மற்றும் 1,125 கிராமங்களை சென்னை பெருநகர் பகுதிகளில் இணைக்கப்பட உள்ளது. தற்போது காஞ்சிபுரம், திருவள்ளூர், மீஞ்சூர் துணை நகரத்தில் இணைக்கப்பட உள்ள பகுதிகள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  காஞ்சிபுரம் துணை நகரம், 62.78 சதுர கி.மீட்டரில் இருந்து, நல்லூர், வயவூர் உள்ளிட்ட 18 கிராமங்களை உள்ளடக்கி அமைகிறது.

திருவள்ளூர் துணை நகரம், 37.74 சதுர கி.மீட்டரில் இருந்து, பாலீஸ்வரம், அதுபாக்கம், அரியபாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்கள் உள்ளடக்கியதாக அமைகிறது. இதேபோல் மீஞ்சூர் துணை நகரம், 111.62 சதுர கி.மீட்டர் பரப்பில், எண்ணூர், நத்தியம்பாக்கம் உள்ளிட்ட 12 கிராமங்களை உள்ளடக்கியதாக அமைகிறது.  மேலும், ஒவ்வொரு துணை நகரத்திலும் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க CMDA முக்கிய துறைகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Cmda, Local News