மாமல்லபுரத்தில் இன்று முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பிரம்மாண்டமான தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடந்தது. இதில், தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆர்ப்பாட்டங்கள், கோஷங்கள், வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருத்து தெரிவித்தால் கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியினர் ஒரு சிலர் கருப்பு சட்டைகள் அணிந்து ‘கோ பேக் மோடி’ (Go back Modi) என்ற கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதன் ஒரு பகுதியாக வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரவியம் தனது ஆதரவாளர்களோடு நேற்று மதியம் காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், ‘மோடியே திரும்பி போ’ என்று கோஷங்களை எழுப்பினார்.
Must Read : ஆபரேஷன் கந்துவட்டி.. கோவையில் சிக்கிய ரூ.1.25 கோடி - 18 பேர் கைது
இந்நிலையில், இன்று புது வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் திரவியம் இல்லத்தில் சூழ்ந்தனர். இதனால் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் பதற்றமான சூழ்நிலை எழுந்தது. அதனைத் தொடர்ந்து, திரவியம் தனது ஆதரவாளர்களோடு வெளியில் செல்லக்கூடாது என்பதற்காக அவர் வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
செய்தியாளர் - அசோக்குமார்.
உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.