ஹோம் /நியூஸ் /சென்னை /

வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் வளர்த்த பிரபல ரவுடி கைது!

வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் வளர்த்த பிரபல ரவுடி கைது!

அபிஷேக்

அபிஷேக்

Rowdy Arrest For Growing Ganja in Terrace | செல்போன் பறிப்பு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து மேற்கொண்ட தொடர் விசாரணையில், அபிஷேக், தனது வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது அம்பலமானது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை கே.கே.நகரில் வீட்டின் மொட்டை மாடியில் 2 கஞ்சா செடி வளர்த்து வந்த பிரபல் ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் தங்கி சொமோட்டோவில் டெலிவரி பாயாக பணிபுரிந்து வரும் ஈஸ்வர் என்ற இளைஞர் நேற்று இரவு சினிமா பார்ப்பதற்காக சினிமா தியேட்டருக்கு சென்று அதிகாலை 3:30 மணியளவில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பாரதிதாசன் காலனி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ஈஸ்வரை தாக்கி அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சொமோட்டோ ஊழியர் ஈஸ்வர் எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

இதையும் படிங்க : வேலை தேடும் பெண்களை குறிவைத்து பாலியல் தொழில் - சென்னையில் சிக்கிய தம்பதி

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கே.கே.நகர் 10வது செக்டார் பகுதியை சேர்ந்த நெருப்பு என்கிற பிரகாஷ், எலி என்கிற சஞ்சய் ஆகிய இருவரை அடையாளம் கண்டனர். அவர்களை கைது செய்ய அவர்கள் வீட்டுக்கு எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜ பாரதிதாசன் மற்றும் உதவி ஆய்வாளர் வாசகராஜ் ஆகியோர் சென்றபோது அங்கு நெருப்பு பிரகாஷ் மற்றும் எலி சஞ்சய் உடன் பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளியான அபி என்கிற அபிஷேக் அவர்களுடன் இருந்துள்ளார்.

இதனையடுத்து செல்போன் பறிப்பு வழக்கில் நெருப்பு பிரகாஷ் மற்றும் எலி சஞ்சய் ஆகிய இருவரையும் கைது செய்தும், சந்தேகத்தின் அடிப்படையில் ரவுடி அபிஷேக்கை காவல் நிலையம் அழைத்து வந்தும் விசாரணை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட நெருப்பு பிரகாஷ் மற்றும் எலி சஞ்சய் ஆகியோரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளியான அபிஷேக்கின் செல்போனை வாங்கி சோதனை செய்தபோது அதில் ஒரு கஞ்சா செடி போட்டோ இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் அவரிடம் கேட்டபோது தான் இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்து வைத்திருப்பதாக பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளி அபிஷேக் தெரிவித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் போட்டோவை சோதனை செய்து பார்த்தபோது அந்த போட்டோ 05/10/2022 அன்று எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசாருக்கு சந்தேகம் வலுக்க, நேரடியாக ரவுடி அபிஷேக்கின் வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது, அபிஷேக்கின் வீட்டு மொட்டை மாடிக்கு செல்லும் வழியில், சந்தேகத்திற்கு இடமான முறையில் தடுப்புகொண்டு அடைக்கப்பட்டு இருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் மொட்டை மாடி மீது ஏறி சோதனை செய்தபோது அங்கு மண் தொட்டியில் 2.5 அடி உயரத்தில் ஒரு கஞ்சா செடியும், 15 சென்டிமீட்டர் உயரத்தில் ஒரு கஞ்சா செடியும் இருப்பது தெரியவந்தது.

இதையும் படிங்க : பைக் மோதி 8 மாத குழந்தையுடன் தாய் உயிரிழந்த சோகம் : மதுபோதையில் வந்த இளைஞரால் நேர்ந்த விபரீதம்!

இரண்டு மண் தொட்டிகளில் வளர்க்கப்பட்ட 2 கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்த போலீசார் அபிஷேக்கிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அபிஷேக்கும் அவரது மாமா மகனான சதீஷ் என்பவரும் சேர்ந்து 2 கஞ்சா செடிகளை யாருக்கும் தெரியாமல் வீட்டு மொட்டை மாடியில் வளர்த்து வருவது தெரியவந்தது. கே.கே.நகர், அசோக் நகர், எம்ஜிஆர் நகர், வடபழனி போன்ற பகுதிகளில் பிரபல கஞ்சா வியாபாரியும் சரித்திர பதிவிட குற்றவாளிமான அபிஷேக் தனது வீட்டு மொட்டை மாடியில் கஞ்சாவை வளர்த்து தனது வீட்டில் உள்ள நபர்கள் யாரும் மேலே செல்லக்கூடாது என தடுப்பு அமைத்து பூட்டு போட்டு வளர்த்து வந்துள்ளார்.

இதனையடுத்து அபிஷேக் மற்றும் அவரது மாமா மகனான சதீஷ் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரித்திர பதிவேடு குற்றவாளியான அபிஷேக் மீது கே.கே.நகர், எம்ஜிஆர் நகர், அசோக் நகர், விருகம்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்குகள், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் என பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

செல்போன் பறிப்பு வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ததுடன் அதன் தொடர்ச்சியாக பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளி தனது வீட்டு மொட்டை மாடியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததையும் கண்டறிந்து குற்றவாளிகளை துரிதமாக கைது செய்த காவல் உதவி ஆய்வாளர்களை காவல் உதவி ஆணையர் தனச்செல்வம் பாராட்டினார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Arrested, Chennai Police, Ganja, Rowdies