ஹோம் /நியூஸ் /சென்னை /

கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு? - வீட்டு உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது..!

கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு? - வீட்டு உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது..!

கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு? - வீட்டு உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது..!

கைது செய்யப்பட்ட மகேஷிடம் நடத்திய விசாரணையில், மேலும் பலரிடம் மிரட்டி பணம் பறித்தது அம்பலமானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் கோயில் நிலத்தில் வீடு கட்டியிருப்பதாக மிரட்டி ரூ.15,000 பறித்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் தெருவை சேர்ந்தவர் 63 வயதான சங்கர். இவர் அதே பகுதியில் கட்டுமான இயந்திரங்களை வாடகை விடும் கடையை நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் இந்து மக்கள் கட்சி பிரமுகரான மகேஷ் என்பவருடன் சங்கருக்கு தொழில் சம்மந்தமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் நட்பாக பழகி வந்த மகேஷ், பின்னர் தீர்த்தபாலீஸ்வரர் கோவில் இடத்தில் ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதாக கூறி சங்கரை மிரட்டி பணப்பறிக்கும் செயலில் ஈடுபட்ட ஆரம்பித்தார். இந்து மக்கள் கட்சியில் சென்னை மாநகர துணை தலைவராக தான் இருப்பதாக கூறி மிரட்டி 15 ஆயிரம் ரூபாய் வரை சங்கரிடம் மகேஷ் பணம் பறித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி மேலும் 20ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மகேஷ் மிரட்டியதால், இது குறித்து ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் சங்கர் புகார் அளித்தார். புகாரின் பேரில் சட்டவிரோதமாக தடுத்தல், மிரட்டல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார், இந்து மக்கள் கட்சி சென்னை மாநகர துணை தலைவர் மகேஷை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மகேஷிடம் நடத்திய விசாரணையில், மேலும் பலரிடம் மிரட்டி பணம் பறித்தது அம்பலமானது. தீர்த்தபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாடகைக்கு குடியிருந்து தொழில் நடத்தி வருகின்றனர்.

கோயில் நிலத்தில் வாடகைக்கு குடியிருக்கும் மக்களிடம், இந்து மக்கள் கட்சி பிரமுகர் மகேஷ், மாமூல் தராவிட்டால் இங்கு குடியிருக்க முடியாது எனக்கூறி தொடர்ந்து மிரட்டி பல பேரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. ஏற்கனவே மகேஷ் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உட்பட 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்து மக்கள் கட்சி பிரமுகர் மகேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Arrested, Crime News, Hindu Makkal Katchi