ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னை புறநகர்ப் பகுதிகளில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழை..!

சென்னை புறநகர்ப் பகுதிகளில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழை..!

கனமழை

கனமழை

Chennai Rains | சென்னை புறநகரான அம்பத்தூர் ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில்  நள்ளிரவில் விட்டு விட்டு பெய்த அடைமழை விடிய விடிய கொட்டி தீர்த்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர், வேளச்சேரி, கீழ்ப்பாக்கம், சைதாப்பேட்டை, அடையாறு, பட்டினம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நேற்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்தது.

  சென்னையின் புறநகர் பகுதியான திருமங்கலம், பாடி, அம்பத்தூர், மண்ணூர்பேட்டை, கொரட்டூர், முகப்பேர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவடி, பட்டாபிராம், அயபாக்கம், திருநின்றவூர், கோவில் பதாகை உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இந்த நிலையில் நள்ளிரவிலும் கனமழையானது  கொட்டி தீர்த்தது. குறிப்பாக அதிகாலை அயப்பாக்கம் பகுதியில் மிக கனமழையானது சுமார் 1 மணி நேரமாக கொட்டி தீர்த்தது.

  மேலும் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து பணிமனையிலிருந்து பாடி மண்ணூர்பேட்டை செல்லக்கூடிய  சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழை நீர் தேங்கி நின்ற நிலையில் மழை நீரானாது ஆறாக சாலையின் குறுக்கே பாய்ந்தபடி சென்றன.

  Also see... நைஜீரியாவில் படகு கவிழ்ந்து கோர விபத்து.. 76 பேர் பரிதாப பலி!

  கனமழையையும் பொருட்படுத்தாமல் இரு சக்கர வாகனங்கள் இரவு நேர அரசு பேருந்து சேவைகள் மற்றும் சரக்கு வாகனங்கள் சென்ற வண்ணம் இருந்தன. மேலும் பழுதான சொகுசு காரை இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் அதன் பின் பக்கத்தில் கால்களால் தள்ளியபடி கொட்டும் மழையில் வேகமாக சென்ற காட்சிகளும் வெகுவாக கவர்ந்தது.

  செய்தியாளர்: கண்ணியப்பன், ஆவடி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chennai, Heavy rain