ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னை புறநகர்ப் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை..! சாலையில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் அவதி

சென்னை புறநகர்ப் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை..! சாலையில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் அவதி

கனமழை

கனமழை

Chennai Rains | சென்னை புறநகர், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில்  நள்ளிரவில் திடீரென கனமழை வெளுத்து வாங்கியது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Avadi, India

  தமிழகத்திலிருந்து தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில்  நேற்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது

  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர், வேளச்சேரி, கீழ்ப்பாக்கம், சைதாப்பேட்டை, அடையாறு, பட்டினம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நேற்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்தது.

  அத்துடன் சென்னை புறநகர் பகுதியான திருமங்கலம் , அம்பத்தூர் பாடி மண்ணூர்பேட்டை, கொரட்டூர், முகப்பேர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவடி, பட்டாபிராம், அயபாக்கம், திருநின்றவூர், கோவில் பதாகை உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இந்த நிலையில் நள்ளிரவிலும் கனமழையானது  கொட்டி தீர்த்தது. குறிப்பாக அதிகாலை அயப்பாக்கம் பகுதியில் சுமார் 1மணி நேரம் மழை கொட்டித் தீர்த்தது.

  சாலையில் தேங்கிய நீரால் பொதுமக்கள் அவதி

  Also see... திருப்பதி : ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் கொடி இறக்கத்துடன் நிறைவு

  ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட ஆவடி JB எஸ்டேட், ரெட்டியார்பாளையம், அயப்பாக்கம் செல்லும் கேம்ப் சாலையில் கனமழை கரணமாக ஏற்பட்டுள்ள மாபெரும் பள்ளங்களில் லோடு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் அத்தியாவசியா கேஸ் சிலிண்டர் ஏற்றுச் செல்லும் வாகனங்கள், கார்கள் செல்லும் வழியில்  ஒரு அடி அளவிற்கு ஏற்பட்டுள்ள பாலத்தில் ஏறி இறங்கி திருவாரூர் தேர் போல் அசைந்து செல்கின்றன. ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக பள்ளங்களை சரி செய்து சாலை வசதிகளை அமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

  செய்தியாளர்: கண்ணியப்பன், ஆவடி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Ambattur Constituency, Avadi, Heavy Rainfall