ஹோம் /நியூஸ் /சென்னை /

கனமழை எதிரொலி.. புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு..

கனமழை எதிரொலி.. புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு..

புழல் ஏரி நீர்வரத்து உயர்வு..

புழல் ஏரி நீர்வரத்து உயர்வு..

Puzhal Lake | கனமழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரிக்கு நீர்வரத்து கனிசமாக அதிகரித்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கனமழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு.

  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நள்ளிரவில் பரவலாக ஒரு சில இடங்களில் கன மழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. செங்குன்றத்தில் மிக கனமழையாக 13செமீ மழை பொழிந்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரிக்கு நீர்வரத்து கனிசமாக அதிகரித்துள்ளது.

  புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 967 கனஅடியாக அதிகரித்துள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2536 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் ஏரிகளுக்கான நீர்வரத்தை 24மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும், நீர்வரத்திற்கேற்ப உபரிநீர் வெளியேற்றுவது முடிவெடுக்கப்படும் எனவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  *அணைகளின் நீர் இருப்பு நிலவரம்*

  செங்குன்றம் சுற்று வட்டாரத்தில் மாவட்டத்திலயே  அதிகபட்சமாக 13 சென்டிமீட்டர் மழை பெய்ததால் புழல் ஏரிக்கு வினாடிக்கு 967 கன அடி நீர்வரத்து அதிகரித்தது. 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரி  17.66 அடியை எட்டியது. 3300 மில்லியன் கன அடி கொண்ட ஏரியில் தற்போது 2536 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது சென்னை குடிநீருக்கு 159 கன அடி அனுப்பப்படுகிறது.

  Read More : அடுத்த 3 மணிநேரத்துக்கு இந்த மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்கப்போகுது - வானிலை மையம் எச்சரிக்கை

  சோழவரம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சோழவரம்  ஏரிக்கு வினாடிக்கு 66 கன அடியாக நீர்வரத்து உள்ளது.18.86 அடி உயரம் கொண்ட ஏரியில் தற்போது   நீர் மட்டம் 4.96 அடி நீர் இருப்பு உள்ளது.

  கண்ணங்கோட்டை தேர்வாய் கண்டிகை  நீர்தேக்கம் அணைக்கு நீர் வரத்து  வினாடிக்கு 70கன அடியாக உள்ளது.

  பூண்டி அணையில் நீர்மட்டம் 35 அடி. தற்போது இருப்பு 24.65 அடியாக உள்ளது. 3231 மில்லியன் கன அடியில் தற்போது  நீர் இருப்பு 797 மில்லியன் கன அடி கொள்ளளவு  உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து  50 கன அடியாக  உள்ளது.

  சென்னை செம்பரம்பாக்கம் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 150 கன அடி நீர்வரத்து வருகிறது. இங்கிருந்து 108 கன அடி நீரேற்று நிலையம் மூலம் சென்னை குடிநீருக்கு அனுப்பப்படுகிறது. விவசாயத்திற்கு 5 கன அடி சிப்காட் தேவைக்கு 3 கன அடி நீர் அனுப்பப்படுகிறது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 20.29 அடி நீர்மட்டம் உள்ளது.

  செய்தியாளர் : பார்த்தசாரதி

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Chennai, Heavy rain, Puzhal, Thiruvallur