ஹோம் /நியூஸ் /சென்னை /

மதுரை டூ சென்னை.. 2 மணி நேரத்தில் வந்து சேர்ந்த இதயம்.. பர பர நிமிடங்கள்..!

மதுரை டூ சென்னை.. 2 மணி நேரத்தில் வந்து சேர்ந்த இதயம்.. பர பர நிமிடங்கள்..!

இதயத்தை கொண்டு வந்த ஆம்புலன்ஸ்

இதயத்தை கொண்டு வந்த ஆம்புலன்ஸ்

Madurai to chennai | உடல் உறுப்புகள் கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி தடை இல்லாத நிலையை ஏற்படுத்தி கொடுப்பது தான் கிரீன் காரிடர் என்று அழைக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Chennai [Madras]

மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். அவரின் இதயத்தை சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு நோயாளிக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மரணம் அடைந்தவரின் உடலில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் இதயம் எடுக்கப்பட்டு, பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து விமானம் மூலம் மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் சென்னை காவல்துறையின் உதவியுடன், விமான நிலையத்தில் இருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கிரீன் காரிடர் அமைக்கப்பட்டு இதயம் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது. உடல் உறுப்புகள் கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி தடை இல்லாத நிலையை ஏற்படுத்தி கொடுப்பது தான் கிரீன் காரிடர் என்று அழைக்கப்படுகிறது.

First published:

Tags: Chennai, Local News, Madurai