Home /News /chennai /

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு; இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு; இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இபிஎஸ் உயர் நீதிமன்றத்தில் முறையீடு

இபிஎஸ் உயர் நீதிமன்றத்தில் முறையீடு

ADMK | அதிமுக பொதுக்குழு தீர்ப்பு எதிரான இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராக இருப்பதால் இறுதி விசாரணையை வியாழக்கிழமைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவித்த தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமைக்கு தள்ளி வைத்துள்ளது.

கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என்று அறிவித்ததுடன் ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஆட்சேபம் தெரிவிப்பதாகவும் நேரடியாக மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வழக்கில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராக இருப்பதால் இறுதி விசாரணையை வியாழக்கிழமைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.



Also see...அரசு பேருந்தில் இருந்து தவறிவிழந்த நடத்துநர் உயிரிழப்பு

எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலும் வழக்கில் வாதங்களை முன் வைக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மேல்முறையீட்டு வழக்குகளின் இறுதி விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: ADMK, Chennai, Chennai High court, EPS

அடுத்த செய்தி