Home /News /chennai /

சென்னையில் கொள்ளையர்களை தனி ஆளாக நள்ளிரவில் துரத்தி பிடித்த தலைமைக் காவலர்.. குவியும் பாராட்டு

சென்னையில் கொள்ளையர்களை தனி ஆளாக நள்ளிரவில் துரத்தி பிடித்த தலைமைக் காவலர்.. குவியும் பாராட்டு

நம்பிக்கையின் பேரில் வீட்டில் தங்க வைத்திருந்த கடை உரிமையாளரை வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டு அலுவலகத்தை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கடை ஊழியர்.

நம்பிக்கையின் பேரில் வீட்டில் தங்க வைத்திருந்த கடை உரிமையாளரை வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டு அலுவலகத்தை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கடை ஊழியர்.

நம்பிக்கையின் பேரில் வீட்டில் தங்க வைத்திருந்த கடை உரிமையாளரை வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டு அலுவலகத்தை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கடை ஊழியர்.

பூக்கடை பகுதியில் நேற்று இரவு தலைமைக் காவலர் சஜீவ் என்பவர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது என்.எஸ்.சி போஸ் சாலையில் இரண்டு சந்தேக நபர்கள் அவரை பார்த்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

ஓட்டம் பிடித்த நபர்களை தலைமைக்காவலர் சஜீவ் தனி ஆளாக இருவரையும் துரத்தி பிடித்துள்ளார். பிடிபட்ட நபர்களிடம் இருந்த மூன்று கைப்பைகளை வாங்கி பார்த்த போது அவர்களது பைகளில் மூன்று பணகட்டுகளும், 19 வெள்ளி நாணயங்களும், வெள்ளி பிள்ளையார் சிலையும் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களிடம் விசாரணை செய்ததில் எவ்வித பதிலும் சொல்லாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த தலைமை காவலர் சஜீவ் ரோந்துப் பணி காவலர்களுக்கு தகவல் சொல்லி சம்பவ இடத்துக்கு வரவழைத்தார். பின்னர் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிடிப்பட்ட நபர்கள் ராஜஸ்தானை சேர்ந்த ராஜு(எ) ராஜாராம்(23) மற்றும் அவரது சகோதரர் பீக்காராம்(30) என்பதும் தெரியவந்தது.

மேலும், ராஜாராம் மற்றும் அவரது அண்ணன் பீக்காராம் ஆகிய இருவரும் இந்த பணம் மற்றும் வெள்ளி நாணயங்களை தங்களது உரிமையாளர் தங்களிடம் கொடுத்து அனுப்பியுள்ளார் என கூறியுள்ளனர். மேலும், பீக்காராம் தன்னுடன் வேலை பார்த்து வந்த தனது நண்பருக்கு போன் செய்து தங்களது உரிமையாளர் பேசுகிறார் சந்தேகம் இருந்தால் கேட்டுக் கொள்ளுங்கள் என போலீசாரிடம் மொபைல் போனை கொடுத்துள்ளார்.

எதிர்முனையில் பேசிய நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதனையடுத்து போலீசார் தங்களது பாணியில் விசாரணை மேற்கொண்டனர்
விசாரணையில், ராஜஸ்தானைச் சேர்ந்த ஜாலம் சிங் என்பவர் சென்னை சவுகார்பேட்டை, கிருஷ்ணா ஐயர் தெருவில் பஜ்ரங் நேவல்ட்டி என்ற பிளாஷ்டிக் கடை நடத்தி வருவதும் அவரிடம் தற்போது பிடிப்பட்ட ராஜு(எ) ராஜாராம் கடந்த 10 நாட்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்திருப்பதும் தெரியவந்தது.

தன்னிடம் வேலைக்கு சேர்ந்த ராஜு(எ) ராஜாராம் தனது சொந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கையில் தனது வீட்டிலேயே ஜாலம் சிங் தங்க வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு சரியாக 2.30 மணி அளவில் ஜலாம் சிங் மற்றும் அவரது குடும்பத்தார்கள் தூங்கிய போது ராஜாராம் அலுவலக சாவியை எடுத்துக்கொண்டு அவர்களை வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டு பின் அலுவலகத்திற்கு சென்று கல்லாவை உடைத்து அதிலிருந்து ரூ.7,85,000 பணம், 200 கிராம் வெள்ளி நாணயங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என தெரிய வந்தது.

கொள்ளையடிப்பதற்காக தனது சகோதரனான பீக்காராம்(30) என்பவரை என்.எஸ்.சி போஸ் சாலையில் நிற்க வைத்து விட்டு ராஜாராம் தனியாக சென்று கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி பின் இருவரும் அங்கிருந்து தப்பிக்க முற்பட்டதும் தெரியவந்தது.

இதனிடையே காலை 6 மணிக்கு ஜாலம் சிங் தூக்கத்திலிருந்து எழுந்து பால் பாக்கெட் வாங்க வீட்டை திறக்க முற்பட்டபோது வீடு வெளிப்பக்கமாக பூட்டி இருந்ததும், உள்ளே அலுவலக சாவி காணாமல் போய் இருப்பதைக் கண்டும் அதிர்ச்சி அடைந்தார்.
இதனால், அருகாமை வீட்டில் இருந்த உறவினரிடம் கூறி வீட்டின் பூட்டை உடைத்து பின் அலுவலகத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கு பணம் மற்றும் வெள்ளி நாணயங்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

பதறி அடித்துக் கொண்டு புகார் தருவதற்காக பூக்கடை காவல் நிலையம் விரைந்தார். அங்கு ஏற்கனவே, தனது கடை ஊழியரான ராஜராம், கொள்ளையடித்த பணம் மற்றும் வெள்ளி நாணயங்களுடன் பிடிப்பட்டிருப்பதை பார்த்து ஆனந்த கண்ணீரில் அழத்தொடங்கியுள்ளார்.

பின்னர், ஜாலம் சிங் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பூக்கடை போலீசார் ராஜராம் மற்றும் அவரது அண்ணன் பீக்காராம் ஆகியோரை கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.7,85,000பணம் மற்றும் 200 கிராம் மதிப்பிலான வெள்ளி நாணயங்கள் ஆகியவற்றை மீட்டு ஜாலம் சிங்கிடம் ஒப்படைத்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜாலம் சிங், புகார் கொடுப்பதற்கு முன்பாகவே குற்றவாளிகளை பிடித்து அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த பூக்கடை போலீசாருக்கு தனது நன்றியை தெரிவித்தார். மேலும், குற்ற சம்பவங்களை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வரும் தமிழ்நாடு காவல்துறையால் தங்களால் பாதுகாப்பாக தொழில் செய்ய முடிவதாகவும் தெரிவித்தார்.

குற்றவாளிகளை தனி ஆளாக துரத்தி பிடித்த தலைமை காவலர் சஜிவை காவல்துறை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Published by:Esakki Raja
First published:

Tags: Chennai, Theft

அடுத்த செய்தி