முகப்பு /செய்தி /சென்னை / நெரிசலில் சிக்கும் தி.நகர் விளையாட்டு வீதியாக மாறியது... கொண்டாட்டத்தில் மக்கள்..!

நெரிசலில் சிக்கும் தி.நகர் விளையாட்டு வீதியாக மாறியது... கொண்டாட்டத்தில் மக்கள்..!

சாலை திருவிழா

சாலை திருவிழா

எப்போதும் வாகன நெரிசலாக காட்சியளிக்கும் பாண்டி பஜார்  விளையாட்டு வீதியாக மாறியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை தியாகராய நகரில் பாரம்பரிய விளையாட்டுகளுடன் சாலைத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

போதை இல்லா தமிழ்நாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் தியாகராய நகரில் சாலைத் திருவிழா நடந்தது. இதனால் எப்போதும் வாகன நெரிசலாக காட்சியளிக்கும் பாண்டி பஜார்  விளையாட்டு வீதியாக மாறியது. கராத்தே, கேட் வாக், கூடைப்பந்து, மிதிவண்டி ஓட்டுதல், ஸ்கேட்டிங், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், தட்டான் கல் போன்ற விளையாட்டுகளை ஏராளமான சிறுவர்கள், பெரியவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.

கயிறு இழுத்தல், கோலம் போடுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. டிரம்ஸ் மேளம் முழங்க இளைஞர்கள், பெண்கள் குத்தாட்டம் போட்டனர். இறுதியாக சினிமா பாடலுக்கு நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

First published:

Tags: Chennai, T-nagar