முகப்பு /செய்தி /சென்னை / "பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சிதான், நேரில் சந்திப்பேன்" - கே.எஸ்.அழகிரி

"பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சிதான், நேரில் சந்திப்பேன்" - கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

Ks alagiri | சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி பிரபாகரன் உயிரோடு இருந்தால் நிச்சயம் அவரை நேரில் சந்திப்பேன்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு இடைத்தேர்தலில் இளங்கோவன் வெற்றி நிமிடத்திற்கு நிமிடம் அதிகமாகி வருகிறது. கூட்டணி கட்சி தலைவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். பிப்.14, 15, 16 ஆகிய நான் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பிப்.15-ம் தேதி பிரச்சாரம் செய்கிறார்.

அந்தியோதயா ரயில் திட்டம் சாதாரண மக்களுக்கான ரயில் திட்டம். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தொடங்கினோம். ஆனால் தமிழகத்தில் அந்தியோதயா ரயில் திட்டம் சரியாக பின்பற்றப்படவில்லை. கூடுதல் அந்தியோதயா இரயில் இயக்க வேண்டும். ரயில்வே துறையில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனயோடு அறிவிக்கப்பட்ட  மருத்துவமனைகள எல்லாம் செயல்பாட்டில் இருக்கும்போது மதுரையில் மட்டும் ஏன் செயல்பாடு தொடங்கவில்லை. தமிழக பாஜக மதுரை எய்ம்ஸ் திட்டம் கொண்டு வர போராட்டம் நடத்தலாமே ? ரயில்வே திட்டங்கள் கொண்டு வர போராடலாமே?

ஆளுநர் தமிழகத்தில் தீண்டாமை இருக்கிறது என்று மோசமான குற்றச்சாட்டை சொல்கிறார். தீண்டாமை இந்தியா முழுவதும் இருக்கிறது. அதை ஒழிப்பதற்கு நாம் ஏராளமான போராட்டம், வன்முறைகளை சந்தித்து இருக்கிறோம். தீண்டாமைக்கு எதிராக தமிழக அரசும், எங்களுடைய கூட்டணியும்இருக்கிறது. ஆனால் உத்திரப்பிரதேசத்தில் எப்படி இருக்கிறது. மாட்டு கறி வைத்திருந்தவர்களை 24 பேரை வீடு புகுந்து கொல்லும் நிலை உள்ளது.

தமிழகத்தில் ஆட்சி, பண்பாடு, கலாச்சாரம், வளர்ச்சிக்கு எதிராக ஆளுநர் ரவி செயல்படுகிறார்.ஆளுநர் ரவி, அரசியல் கருத்துக்களை மரபுகளை மீறி பேசுகிறார்.ஆளுநர் மிகப்பெரிய சதி செய்கிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைந்து முடிப்பதற்கு, ஆளுநர் ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கூறினார்.

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு மத்திய அரசு வரிவிலக்கு செய்தது. ஆனால், மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என தெரிவித்தார்.

மேலும் பிரபாகரன்  குறித்து பழ.நெடுமாறன் கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர், பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி தான். பிரபாகரன் வந்தால் நான் நேரில் சந்திப்பேன். அதில் ஒன்றும் மாற்று கருத்து இல்லை என தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில், காங்கிரஸ் கட்சி தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அதிமுக சொல்வது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது எனவும் தெரிவித்தார்.

First published:

Tags: Chennai, KS Alagiri, LTTE, Prabhakaran