Home /News /chennai /

5 வயது சிறுமியின் கைப்பையில் துப்பாக்கி தோட்டா... சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

5 வயது சிறுமியின் கைப்பையில் துப்பாக்கி தோட்டா... சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

Chennai | இஸ்ரேல் நாட்டில் இருந்து சென்னை வந்த 5 வயது சிறுமியின் கைப்பையில் துப்பாக்கி தோட்டாவால் பரபரப்பு ஏற்பட்டது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னை உள்நாட்டு முனையத்தில் இருந்து பெங்களூரூ செல்ல வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா துபே(வயது-64) என்பவரின் குடும்பத்தினர் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது 5 வயது பெண் குழந்தையின் கைப்பையில் இருந்து வெடி பொருள் இருப்பதற்கான அலரம் ஒலித்தது.

    இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் கிருஷ்ண துபே குடும்பத்தினரை நிறுத்தி 5 வயது பெண் குழந்தை வைத்திருந்த கைப்பை தனியே எடுத்து பிரித்து பார்த்தனா். அதனுள் வெடிக்காத ஒரு துப்பாக்கி குண்டு இருந்ததை கண்டு பிடித்தனா்.

    இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த குண்டை பறிமுதல் செய்தனா். கிருஷ்ணா துபே குடும்பத்தினா் பயணத்தை ரத்து செய்தனா். இதையடுத்து மேல் நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனா். போலீசாா் நடத்திய விசாரணையில், கிருஷ்ண துபே மத்திய கலால் பிரிவில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    கடந்த சில தினங்களுக்கு முன் குடும்பத்தினருடன் இஸ்ரேல் நாட்டிற்கு சுற்றுலா சென்றனா். சுற்றுலாவை முடித்து விட்டு துபாய் வழியாக சென்னை வந்தார். சென்னையில் இருந்து பெங்களூரூ செல்ல உள்நாட்டு முனையத்திற்கு வந்தாகவும் இஸ்ரேல் கடற்கரை மணலில் இந்த பொருள் கிடந்தது. அது துப்பாக்கி குண்டு என்று தெரியாமல் எடுத்து குழந்தைக்கு விளையாட கொடுத்திருந்தோம் என்று கூறினா்.

    Also see...கொள்ளு தாத்தா முதல் எள்ளு பேரன் வரை... ஐந்து தலைமுறைகளைச் சேர்ந்த 500 பேர் ஓரிடத்தில் சங்கமம்

    போலீசாா் குண்டை ஆய்வு செய்தபோது அது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டது. பெரிய துப்பாக்கிகளில் போட்டு வெடிக்கக்கூடிய "9 எம்.எம்" ரகம் என தெரிந்தது. இதையடுத்து குண்டை போலீசாா் பறிமுதல் செய்தனா். கிருஷ்ண துபேவிடம் எழுதி வாங்கி கொண்டு எச்சரித்து பெங்களூருக்கு அனுப்பி வைத்தனா்.

    செய்தியாளர்: சுரேஷ், சென்னை விமானநிலையம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Airport, Chennai, Israel

    அடுத்த செய்தி