ஹோம் /நியூஸ் /சென்னை /

ஒரு அங்குலம் இடம் இருந்தாலும் தாவரம் வளர்க்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

ஒரு அங்குலம் இடம் இருந்தாலும் தாவரம் வளர்க்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

மாபெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கும் காலநிலை மாற்றத்தால், மழை, வெயிலை பிரிக்க முடியாத நிலையும், காலநிலையை கணிக்க முடியாத நிலையும் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  ஒரு அங்குலம் இடம் இருந்தாலும் ஒரு தாவரம் வளர்க்க உறுதியேற்க வேண்டுமென, தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  2022-23-ம் ஆண்டு, தமிழகத்தில் காடு மற்றும் மரங்களின் பரப்பை 23.8 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்த்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, மாநிலம் முழுவதும் மரக்கன்றுகள் நடும், 'பசுமைத் தமிழகம்' திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின், வண்டலூரில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், மாபெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கும் காலநிலை மாற்றத்தால், மழை, வெயிலை பிரிக்க முடியாத நிலையும், காலநிலையை கணிக்க முடியாத நிலையும் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

  இதையும் வாசிக்க: ''மக்களுக்கு நல்லது செய்ய விரும்பும் நல்லெண்ணம் கொண்டவர்'' முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த ஆளுநர் ஆர்.என்.ரவி

  2018 கஜா புயலின்போது பாதிப்பை குறைத்தது அலையாத்தி காடுகள் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், உணவு உற்பத்தியில் சமரசம் செய்யாமல் மர உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென கூறினார். ஒவ்வொருவரும் கிடைக்கும் இடங்களில் தாவரங்களை வளர்த்து, தமிழகத்தை பசுமை இடமாக மாற்ற வேண்டுமென்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Climate change, CM MK Stalin, Global warming