Home /News /chennai /

கொருக்குப்பேட்டையில் பாட்டியை கழுத்து அறுத்து கொலை செய்த பேரன் கைது

கொருக்குப்பேட்டையில் பாட்டியை கழுத்து அறுத்து கொலை செய்த பேரன் கைது

கொலை செய்தவரை கைது செய்த போலீஸ்

கொலை செய்தவரை கைது செய்த போலீஸ்

Chennai | சென்னை கொருக்குப்பேட்டையில் தன்னுடைய பாட்டியை பேரனை கழுத்து அறுத்து கொலை சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சென்னை கொருக்குப்பேட்டை கருமாரி மாரியம்மன் நகர் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் விஷாலாட்சி. இவர் அருகில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய மகள் அமுதாவிற்கு புதிதாக வீடு கட்டுவதற்காக இரண்டு லட்சம் பணம் கொடுத்து உதவிதாக கூறப்படுகிறது.

    அந்த பணத்தை மகள் அமுதா சிறிது சிறிதாக திருப்பிக் கொடுத்துள்ளார். மேலும் திருப்பி கொடுக்க வேண்டிய பாதி தொகையை கேட்டு அடிக்கடி வாய் தகராறில் அமுதாவின் அம்மா ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று இரவு அமுதாவிடம் மீண்டும் பிரச்சனை செய்துள்ளார். அப்பொழுது ஆத்திரமடைந்த அமுதாவின் மகன் சதீஷ் தன்னுடைய பாட்டியை  வீட்டிலிருந்த சுத்தி மற்றும் பிளேடால் தாக்கியுள்ளார். அதில் விஷாலாட்சி அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.

    Also see... சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர்களை தொடர்ந்து அடிக்க தூண்டிய எஸ்.ஐ - பெண் காவலர் சாட்சியம்

    அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆர்.கே.நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடி இருந்த விஷாலாட்சியை  மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே இறந்துவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சதீஷ்-ஐ கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர்: அசோக்குமார், கொருக்குபேட்டை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai, Crime News, Murder case

    அடுத்த செய்தி