5 சவரனுக்கு உட்பட்டு கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்கள் உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் அவர்களுக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தற்போது வரை 5,22,514 விவசாயிகளுக்கு ரூ. 3,969 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 14 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சுமார் 1 லட்சம் பேர், 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் வைத்து தற்போது வரை நகை கடனுக்கான உறுதிமொழி பத்திரம் கொடுக்காததால் அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் கூறினார். அவர்கள் உறுதிமொழி பத்திரத்தை சமர்பிக்கும் பட்சத்தில் அவர்களது கடன் தள்ளுபடி செய்யப்படும் என உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சென்னை அண்ணாநகர், திருமங்கலம், திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 நியாயவிலை கடைகள் மற்றும் கூட்டுறவு மருந்தகங்களில் கூகுள் பே மூலம் பணம் செலுத்தி பொருட்களை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: மெரினாவில் இனி இலவச வை-பை சேவை! - சென்னை மாநகராட்சியின் அசத்தல் திட்டம்!
மேலும் வடகிழக்கு பருவ மழை காரணமாக காய்கறி விலை உயர்வு ஏற்பட்டால், பசுமை பண்ணை காய்கறி கடைகளில் குறைந்த விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதியளித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gold loan, Google pay, Tamilnadu