ஹோம் /நியூஸ் /சென்னை /

74ஆவது குடியரசு தின விழா.. தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி!

74ஆவது குடியரசு தின விழா.. தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி!

தமிழ்நாடு ஆளுநர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

தமிழ்நாடு ஆளுநர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

சென்னையில் உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியை ஏற்றி வைத்தார் தமிழ்நாடு ஆளுநர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

நாட்டின் 74ஆவது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றுகிறார். தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவி உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியை ஏற்றினார்.

சென்னை காமராஜர் சாலையில் ஆளுநர் ஆர். என் ரவி குடியரசு தின விழாவில் மூவர்ண்ண கொடியை ஏற்றினார். வழக்கமாக காந்தி சிலைக்கு முன் தமிழக ஆளுநர் தேசிய கொடியை ஏற்றி வைப்பார். ஆனால் அங்கு மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால், இந்த முறை உழைப்பாளர் சிலை அருகில் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என் ரவி.

சுமார் 6800 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் தனது மனைவியுடன் வருகை தந்து கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர். இதையடுத்து குடியரசு தின விழாவில் பங்கேற்கும் அணிவகுப்புகளை ஆளுநர் ஏற்றார்

First published:

Tags: CM MK Stalin, Republic day, RN Ravi