ஹோம் /நியூஸ் /சென்னை /

மீன் தொட்டிக்குள் விழுந்த விளையாட்டு பொருளை எடுக்க முயன்ற பெண் குழந்தை பரிதாமபாக உயிரிழப்பு

மீன் தொட்டிக்குள் விழுந்த விளையாட்டு பொருளை எடுக்க முயன்ற பெண் குழந்தை பரிதாமபாக உயிரிழப்பு

உயிரிழந்த குழந்தை மீனாட்சி

உயிரிழந்த குழந்தை மீனாட்சி

ஒன்றரை வயது பெண் குழந்தை மீனாட்சி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது குழந்தையின் விளையாட்டு பொருள் வீட்டின் கீழே வைத்திருந்த மீன் தொட்டியில் விழுந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னை அம்பத்தூரில் விளையாட்டு பொருளை எடுக்க முயன்ற குழந்தை மீன் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை அம்பத்தூர் வெங்கடபுரம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் யுவராஜ், அவரது மனைவி கௌசல்யா. யுவராஜ் பிளம்பர் வேலை செய்து வருகிறார். நேற்று வழக்கம்போல் அவர் பணிக்கு சென்று விட்டார். மனைவி கௌசல்யா வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்துள்ளார்.

  இவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தை மீனாட்சி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது குழந்தையின் விளையாட்டு பொருள் வீட்டின் கீழே வைத்திருந்த மீன் தொட்டியில் விழுந்துள்ளது. அந்த விளையாட்டுப் பொருளை எடுக்க மீனாட்சி முற்படும்பொழுது தலைக்குப்புற கவிழ்ந்து மீன் தொட்டி உள்ளே விழுந்துள்ளார்.

  Also Read : எங்க ஊரு சாலையை காணோம்..! - வடிவேலு பாணியில் போராட்டத்தில் இறங்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர்!

  இதனை கவனிக்காத கௌசல்யா வீட்டின் வெளியே வேலை செய்து கொண்டிருந்தார். பத்து நிமிடம் கழித்து கௌசல்யா உள்ளே வந்து பார்க்கும்போது, குழந்தை தலைகீழாக மீன் தொட்டியில் விழுந்திருப்பதைக் கொண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்

  உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர் : கன்னியப்பன்

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Chennai, Child, Died, Girl Child