முகப்பு /செய்தி /சென்னை / ஆபாசமாக சித்தரித்து அவதூறு.. சைபர் க்ரைமில் புகார் கொடுத்த காயத்ரி ரகுராம்!

ஆபாசமாக சித்தரித்து அவதூறு.. சைபர் க்ரைமில் புகார் கொடுத்த காயத்ரி ரகுராம்!

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

பாஜகவிற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் நம் இந்தியாவிற்கும், அண்ணாமலையின் தலைமை பெண்களுக்கு ஆபத்தானது - காயத்ரி ரகுராம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தன்னை சிலர் ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்புவதாக சைபர் க்ரைமில் ஆன்லைன் மூலமாக புகார் அளித்தார் காயத்ரி ரகுராம்.

சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் தொடர்ச்சியாக பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் அவருக்காக இயக்கங்குவதாக கூறப்படும் வார் ரூம் மீதும் பல்வேறு புகார்களை வைத்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிடுவதாகவும் அவர்கள் மீது சைபர் கிரைமில் புகார் அளிக்க உள்ளதாகவும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்னர் அவர் ட்விட்டர் பக்கத்தில், “அண்ணாமலை வார்ரூம் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கு மார்பிங் திறன்களைப் பயிற்றுவிப்பது போல் தெரிகிறது. New low by leader. பாஜகவிற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் நம் இந்தியாவிற்கும், அண்ணாமலையின் தலைமை பெண்களுக்கு ஆபத்தானது” என குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, தனக்கு தொடர்ந்து இது போன்ற பதிவுகள் வருவதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறையினரை அணுக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நாளை நேரடியாக காவல்துறை அதிகாரிகளை சந்தித்து எழுத்து பூர்வமாக புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது ஆன்லைன் மூலம் சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளார்.

First published: