Home /News /chennai /

கஞ்சா போதையில் கண்மூடித்தனமாக தாக்குதல்.. வணிகர்களை பணம் கேட்டு மிரட்டும் கும்பல் - கண்ணகி நகரில் பதுங்கி இருந்த ஒருவர் கைது

கஞ்சா போதையில் கண்மூடித்தனமாக தாக்குதல்.. வணிகர்களை பணம் கேட்டு மிரட்டும் கும்பல் - கண்ணகி நகரில் பதுங்கி இருந்த ஒருவர் கைது

கடை உரிமையாளர் மீது தாக்குதல்

கடை உரிமையாளர் மீது தாக்குதல்

Chennai district News : சென்னை மேடவாக்கத்தில் பழைய இரும்புகடை உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டி கத்தி மற்றும் கட்டையால் தாக்கிய கஞ்சா போதை ஆசாமி ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருக்கும் மற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 37).  இவர் சென்னை மேடவாக்கம் ரங்கநாதபுரத்தில் பழைய இரும்புகடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 3ஆம் தேதி இரவு பள்ளிக்கரணை காவல் நிலையம் பின்புறம் உள்ள குப்பைமேட்டில் பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்தார்.

    அப்பொழுது கஞ்சா போதையில் வந்த மூன்று பேர் ஆனந்தகுமாரை பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது, தன்னிடம் பணம் இல்லை என கூறி பணம் தர மறுத்ததால் கத்தி மற்றும் கட்டையால் அவரை கண்மூடிதனமாக தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

    தொடர்ந்து மேடவாக்கம் சுற்றுவட்டார பகுதியில் வணிகர்கள் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வியாபாரிகள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உரிய நடவடிக்கை எடுக்ககோரி போராட்டம் நடத்தினர்.

    தாக்குதலுக்கு ஆனந்தகுமார் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சம்பவத்தன்று மேடவாக்கம் நெசவாளர் நகரை சேர்ந்த 33 வயதான அஜ்மீர் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் இனைந்து தாக்கியது தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட அஜ்மீர்


    இந்நிலையில், அவர்கள் மூன்று பேரும் தலைமறைவாகினர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான அஜ்மீர் கண்ணகி நகரில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் அஜ்மீரை கைது செய்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அவரை, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில் அவர் மீது ஏற்கனவே கிண்டி, பள்ளிக்கரணை, கானாத்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் ஏற்கனவே ஒரு முறை அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறை சென்றவர் என்பதும் தெரியவந்தது.

    Must Read : இந்துக்கள் கொண்டாடிய மொஹரம் பண்டிகை..! - மத நல்லிணக்கத்திற்கு உதாரணமான முதுவன் திடல் கிராமம்

    அஜ்மீர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள இரண்டுபேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    செய்தியாளர் - ப.வினோத்கண்ணன்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Attack, Chennai, Crime News, Ganja, Pallikaranai police station

    அடுத்த செய்தி