ஹோம் /நியூஸ் /சென்னை /

கொரியர் செய்வதாக கூறி ரூ.8 லட்சம் பெண்ணிடம் மோசடி : ஜார்கண்ட் கும்பல் கைது!

கொரியர் செய்வதாக கூறி ரூ.8 லட்சம் பெண்ணிடம் மோசடி : ஜார்கண்ட் கும்பல் கைது!

கைது செய்யப்பட்ட ஷம்ஷாத் அன்சாரி, இக்பால் அன்சாரி, ஷக்பாஸ் அன்சாரி

கைது செய்யப்பட்ட ஷம்ஷாத் அன்சாரி, இக்பால் அன்சாரி, ஷக்பாஸ் அன்சாரி

அவருடைய விவரங்கள் அனுப்பக்கூடிய பொருட்கள் அவருடைய வங்கி கணக்கு UPI விவரங்கள் ஆகியவற்றை அனைத்தையும் கேட்டுள்ளனர். இதனை உண்மை என நம்பிய மருத்துவர் ரெஜினா அவருடைய வங்கி கணக்கு விவரங்கள் UPI ஐடி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றையும் கொடுத்துள்ளார். மேலும், OTP எண்ணையும் கொடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை அண்ணா நகரில் வசித்து வருபவர் மருத்துவர் ரெஜீனா. இவர் கனடா நாட்டில் உள்ள தனது மகளுக்கு சில பொருட்களை அனுப்புவதற்காக இணையதளத்தில் சர்வதேச கொரியர் நிறுவனங்கள் குறித்து தேடியிருக்கிறார். அப்போது ப்ளூ டாட் கொரியர் சேவை எனக்கூறி ஒரு டோல் ஃப்ரீ எண் இருந்துள்ளது.

அந்த எண்ணை தொலைபேசியில் அழைத்த போது, அந்த எண்ணில் இருந்து மீண்டும் மருத்துவருக்கு அழைப்பு வந்துள்ளது. அப்போது அவருடைய விவரங்கள் அனுப்பக்கூடிய பொருட்கள் அவருடைய வங்கி கணக்கு UPI விவரங்கள் ஆகியவற்றை அனைத்தையும் கேட்டுள்ளனர். இதனை உண்மை என நம்பிய மருத்துவர் ரெஜினா அவருடைய வங்கி கணக்கு விவரங்கள் UPI ஐடி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றையும் கொடுத்துள்ளார். மேலும், OTP எண்ணையும் கொடுத்துள்ளார்.

இந்த விவரங்களை பெற்ற மோசடி கும்பல் ரெஜினாவின் அக்கவுண்ட் மற்றும் அவரது பாஸ்வேர்டு ஆகியவற்றை ரெஜினாவுக்கு தெரியாமல் பயன்படுத்தி வந்துள்ளனர். நாளொன்றுக்கு ஒரு லட்ச ரூபாய்  என எட்டு நாட்களில் ரூ. 8 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் பணத்தை அவரது வங்கி கணக்கில் இருந்து எடுத்துள்ளனர். அவரது UPI மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தியதால் UPI இருந்து அவருக்கு எந்தவிதமான குறுஞ்செய்திகளும் வரவில்லை. அதே நேரத்தில் வங்கியில் இருந்து வந்த குறுஞ்செய்திகளை அவர் கவனிக்காமல் விட்டிருக்கிறார். அதன் பின்பு தான் ஏமாற்றபட்டதை அறிந்து இது தொடர்பாக  சைபர் கிரைமில் புகார் அளித்தர்.

புகாரின் அடிப்படையில் அந்த டோல் ஃப்ரீ எண், முகவரி ஆகியவற்றை வைத்து சோதனை நடத்திய போது ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ந்தாரா மோசடிக்காரர்களின் கைவரிசை என தெரியவந்தது. இதனையடுத்து வங்கி பரிவர்த்தனை விவரங்கள் எடுத்து ஜம்தாரா  சென்று ஷம்ஷாத் அன்சாரி, இக்பால் அன்சாரி, ஷக்பாஸ் அன்சாரி ஆகிய மூன்று நபர்களை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

ஜம்தாரா மோசடிக்காரர்கள் இதே போல நாடு முழுவதும் பல நபர்களிடம் கொரியர் அனுப்புவதாக கூறி மோசடி செய்து வந்துள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து மூவரையும் சைபர் கிரைம் போலீசார் சிறையில் அடைத்தனர்.

Published by:Raj Kumar
First published:

Tags: Chennai, Crime News, Cyber crime