விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகம் உட்பட்ட பகுதிகளில் 2,554 சிலைகள் வைக்க காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் சிலை வைத்து வழிபடுதல் மற்றும் கரைப்பதற்காக காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தது. குறிப்பாக மதவாத வெறுபுணர்ச்சியை தூண்டும் வகையிலோ பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கம் செய்யக்கூடாது என தெரிவித்திருந்தனர்.
அதேபோல காவல்துறை அனுமதி வழங்கிய நாட்களில் அனுமதிக்கப்பட்ட பாதைகளில் மட்டுமே சென்று சிலைகளை கரைக்க வேண்டும் எனவும் குறிப்பாக ஊர்வல பாதைகளில் பட்டாசுகள் வெடிக்க கூடாது எனவும் தெரிவித்திருந்தது.
பாலவாக்கம் கடற்கரை, பட்டினம்பாக்கம் ஸ்ரீனிவாசபுரம் கடற்கரை, காசிமேடு கடற்கரை, திருவொற்றியூர் கடற்கரை ஆகிய நான்கு கடற்கரை பகுதிகளில் மட்டுமே சிலைகளை கரைக்க சென்னை காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
விநாயகர் சிலைகளை கரைக்க ஊர்வலம் செல்லும் நேரத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 21,800 காவல் துறையினர் மற்றும் 2650 ஊர்க்காவல் படையினர் என 24,450 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிலைகள் கரைக்கும் இடங்களான பாலவாக்கம் கடற்கரை, பட்டினம்பாக்கம் கடற்கரை, காசிமேடு கடற்கரை, திருவொற்றியூர் கடற்கரை ஆகிய நான்கு கடற்கரைகளிலும் காவல் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் உதவி மையங்கள் வைக்கப்பட்டு உயர் கோபுரங்கள் மூலம் பைனாகுலர் கண்கானிப்பு பணிகளில் போலீசார் ஈடுப்படுத்தபடுவர்.
சிலை கரைக்கும் ஒவ்வொரு இடத்திலும் இரண்டு மிகப்பெரிய கிரேன்கள் மற்றும் 100 மீட்டர் தூரத்துக்கு சிலைகளை மணற்பரப்பில் கொண்டு செல்வதற்கான ட்ராலிகள் அமைக்கப்பட்டு, ஐந்து கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் 32 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். மேலும் கரைக்கும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு இணை ஆணையர் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படும் எனவும் சென்னை காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது
ALSO READ | மீண்டும் தக்காளி விலை கிடுகிடு உயர்வு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
சிலை கரைக்கும் நாளான நாளை நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் எனவும் அதனால் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் எனவும் சென்னை போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறிப்பாக நாளை சிலை கரைக்கும் இடத்திலோ அல்லது சிலையை ஊர்வலமாக கொண்டு செல்லும் போதோ ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் பிரச்சனைக்குரியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையரகம், தாம்பரம் காவல் ஆணையரகம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Chennai Police, Ganesh Chaturti, Ganesh idols, Tamilnadu, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி