ஹோம் /நியூஸ் /சென்னை /

மெரினா டூ பெசன்ட் நகர்.. சென்னையில் வருகிறது ரோப் கார்.. தயாராகும் ப்ளான்!

மெரினா டூ பெசன்ட் நகர்.. சென்னையில் வருகிறது ரோப் கார்.. தயாராகும் ப்ளான்!

ரோப் கார் சேவை

ரோப் கார் சேவை

சென்னை மெரினா கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரைக்கு இனி பேருந்துக்கு பதிலாக ரோப் காரிலும் செல்லலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

உலகின் இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையான மெரினாவுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை இருந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மொத்தம் 6 மாநிலங்களில் ரோப் கார் சேவையை கொண்டு வர மத்திய அரசின் சாலை போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக சென்னையில் மெரினா முதல் பெசன்ட் நகர் இடையே கடற்கரையோரமாக ரோப் கார் திட்டத்தின் சாத்தியக் கூறு ஆய்வுக்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை மெரினா கடற்கரையில் இருந்து, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி நகர் வழியே பெசன்ட் நகர் கடற்கரை வரை நான்கு புள்ளி ஆறு கிலோமீட்டர் தூரம் ரோப் கார் அமைக்கப்படவுள்ளது. இத்திட்டம் தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய தேசிய நெடுஞ்சாலை சரக்கு மேலாண்மை நிறுவனம் ஒப்பந்தம் வெளியிட்டுள்ளது. ஒப்பந்தத்தை பெற்ற 24 மாதங்களில் சாத்தியக்கூறு அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், புவிசார் தொழிநுட்பம் உள்ளடக்கிய பல்வேறு ஆய்வுகளும், சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பாக ஆய்வுகளும் மேற்கொண்டு ரோப் கார் சேவை அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

First published:

Tags: Marina Beach