ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் இரவு முழுவதும் விட்டுவிட்டு வெளுத்த மழை - நுங்கம்பாக்கத்தில் 4 செமீ மழைபதிவு!

சென்னையில் இரவு முழுவதும் விட்டுவிட்டு வெளுத்த மழை - நுங்கம்பாக்கத்தில் 4 செமீ மழைபதிவு!

மழை

மழை

Chennai Rains: இரவு முதல் விட்டு விட்டு பெய்த மழையால் சென்னை நுங்கம்பாக்கத்தில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. சென்னையில் முக்கிய நகர்ப்பகுதிகளிலும், புறநகர்ப்பகுதிகளிலும் மழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 4 செமீ மழை பதிவாகியுள்ளது. வடபழனி, தியாகராயநகர், அசோக்நகர், கோடம்பாக்கம், கேகே நகர், கோயம்பேடு பகுதிகளிலும் மழை விட்டுவிட்டு பெய்தது.

    இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    மீண்டும் உயரும் சிமெண்ட் விலை…?! கலக்கத்தில் கட்டுமானத்துறை!

    08.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    09.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    10.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    11.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

    Published by:Murugadoss C
    First published:

    Tags: Chennai Rain, Weather News in Tamil