ஹோம் /நியூஸ் /சென்னை /

அரசு பேருந்தில் பெண்கள் வேண்டுமென்றால் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பயணிக்கலாமா? - அமைச்சர் விளக்கம்

அரசு பேருந்தில் பெண்கள் வேண்டுமென்றால் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பயணிக்கலாமா? - அமைச்சர் விளக்கம்

அமைச்சர் சிவசங்கர்

அமைச்சர் சிவசங்கர்

மேலும் சென்னையில் மட்டும் நாள்தோறும் 10,50,000 பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர் என தெரிவித்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தில் விருப்பப்படுபவர்கள் வேண்டுமென்றால் பணம் கொடுத்து பயணிக்கலாம் என வெளியான தகவல் போலியானது என போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

  சமீபத்தில் அமைச்சர் பொன்முடி திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை ‘ஓசி பேருந்து’ என குறிப்பிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் பேச்சிற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

  இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, தான் வழக்கு மொழியில் ஓசியென கூறியதை சிலர் தவறாக புரிந்துக்கொண்டதாக விளக்கமளித்தார்.

  இதனிடையே மூதாட்டி ஒருவர், நான் இலவசமாக பயணிக்க மாட்டேன். டிக்கெட்டிற்கு பணம் கொடுத்து தான் பயணிப்பேன் என நடத்துநரிடம் அடம் பிடித்த வீடியோ காட்சி வைரலானது. மேலும் விசாரணையில் அவர் அதிமுகவினர் தூண்டதலில் பேரில் இவ்வாறு செய்ததாகவும் செய்திகள் வெளியாகின,

  இந்நிலையில் இது போன்ற சம்பவங்களை தவிர்க்க, விருப்பப்படுபவர்கள் வேண்டுமென்றால் டிக்கெட்டிற்கு பணம் கொடுத்து செல்லலாம் என போக்குவரத்து துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக தகவல்கள் வெளியாகின.

  இதையும் வாசிக்க: குவைத்தில் வேலைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. எப்படியாவது காப்பாத்துங்க என வீடியோவில் கதறல்.. முதல்வர் தலையீட குடும்பத்தினர் வேண்டுகோள்

  இதுகுறித்து விளக்கமளித்த போக்குவரத்து துறை அதிகாரிகள், அவ்வாறு வெளியான செய்தி போலியானது எனவும் இந்த திட்டம் வழக்கம் போல் தொடரும் எனவும் கூறினர். மேலும் சென்னையில் மட்டும் நாள்தோறும் 10,50,000 பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர் என தெரிவித்தனர்.

  போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த தகவல் படி, பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது எனவும் வேண்டுமென்றால் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என கூறினார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Minister Ponmudi, Minister Sivasankar, Women