Home /News /chennai /

சொகுசு கார்கள், கோட் சூட்டுகள், ராஜதோரணை உடன் பந்தா... டாக்டரிம் ரூ.70 லட்சம் மோசடி செய்தவர் கைது

சொகுசு கார்கள், கோட் சூட்டுகள், ராஜதோரணை உடன் பந்தா... டாக்டரிம் ரூ.70 லட்சம் மோசடி செய்தவர் கைது

மருத்துவரிடம் மோசடி செய்த 2 பேர் கைது

மருத்துவரிடம் மோசடி செய்த 2 பேர் கைது

Chennai | சொகுசு கார்கள், 50 கோட் சூட்டுகள், விலை உயர்ந்த ஆபரணங்கள் என பார்ப்பவர்கள் எளிதில் நம்பும்படியாக, ராஜதோரணையுடன் பந்தாவாக வலம் வந்துள்ளார் மோசடியில் கைது செய்யப்பட்டவர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    தேசிய மருத்துவ ஆணைய உறுப்பினர் பதவி வாங்கித் தருகிறேன் எனக்கூறி போரூர் (SRMC) தனியார் மருத்துவக் கல்லூரி மூளை நரம்பியல் துறை பேராசிரியராக பணிபுரிந்த செல்வகுமார் என்பவரிடம் 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சென்னை அண்ணா நகரை சேர்ந்த சசிகுமார்(46), ராமநாதபுரத்தை சேர்ந்த நடராஜன் வயது (48 ) இதில் அண்ணா நகர் சசிகுமார் மீது சேலம், பவானி, வெள்ளி திருப்பூர், கருமந்துறை காவல் நிலையங்களில் என மொத்தம் 7 மோசடி வழக்குகள், ஒரு கொலை மிரட்டல் வழக்கு உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    இதில் பணம் கொடுத்து ஏமாந்த ஈக்காட்டுத்தாங்கலில் வசிக்கும் மூளை நரம்பியல் துறை பேராசிரியர் செல்வகுமார், சென்னை அருகே போரூர் எஸ் ஆர் எம் சி கல்லூரியில் 30 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். மேலும் மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சசிகுமார், விருகம்பாக்கம் நடேசன் காலனியில் உள்ள அரசு உயர் அதிகாரிகள் குடியிருப்பில்( ஐஏஎஸ் ,ஐபிஎஸ் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள்) வீடு வாடகைக்கு எடுத்து, தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொண்டு நம்ப வைத்து மோசடி செய்துள்ளார்.

    சொகுசு கார்கள், 50 கோட் சூட்டுகள், விலை உயர்ந்த ஆபரணங்கள் என பார்ப்பவர்கள் எளிதில் நம்பும்படியாக, ராஜதோரணையுடன் பந்தாவாக வலம் வந்துள்ளார். டெல்லியில் உள்ள அரசின் அனைத்து துறை செயலர்கள், இதேபோல் மற்ற மாநிலங்களில் பணியாற்றும் அரசு உயர் அதிகாரிகளை தனக்கு நன்றாக தெரியும் என கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.



    Also see...கரிசல் மண்ணை கொண்டு சாலை.. போராட்டத்தில் ஈடுப்பட்ட கிராமத்தினர்...

    சென்னை சுற்றுவட்டார பகுதியில் இதேபோல எத்தனை பேரிடம் மோசடி செய்துள்ளார் எனவும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மற்றொரு நபர் நடராஜன் (48) காவல் துறையில் பணியாற்றியவர். ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டவர் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

    செய்தியாளர்: சோமசுந்திரம், பூந்தமல்லி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Cheating case, Chennai, Crime News, Poonamallee Constituency

    அடுத்த செய்தி