வனப்பகுதியை 33% விரிவாக்கம் செய்ய அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மொழியை காப்பாற்றும் எண்ணத்துடன் பல்வேறு முயற்சியை தமிழக அரசு எடுத்து வருவதாகவும், அதனை உறுதிப்படுத்தும் விதமாக பேச்சு வழக்கில் இருந்து வந்த படுக இன மக்களின் மொழியை பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்பு தமிழில் மொழி பெயர்த்து 14ஆயிரம் வார்த்தைகள் அடங்கிய அகராதியை முதலமைச்சர் வெளியிட்டார். இது அப்பகுதியில் பயிலும் இளைஞர்களுக்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும் என்றார். படுக மொழியில் உள்ள சுமார் 1லட்சத்து 50ஆயிரம் வார்த்தைகளில் 14ஆயிரம் சொற்களை மொழி பெயர்த்துள்ளோம் என தெரிவித்தார்.
மேலும், மனிதர்கள் எண்ணிக்கை அதிகமான காரணத்தினால், விலங்குகள் இருப்பிடம் நோக்கி நகர தொடங்கியுள்ளனர். அதனால் விலங்குகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதை கட்டுப்படுத்தும் விதமாக வனப்பகுதியில்
கால்வாய், தொங்கு வேலி, சோலார் மூலம் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இதையும் படிங்க | என்ன பழக்கம் இது.. சட்டென கோபமாக கத்திய கனிமொழி.. வைரலாகும் வீடியோ..!
வனப்பகுதியை 33% விரிவாக்கம் செய்ய அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், கூலி வேலை செய்வதற்கு தற்போது ஆட்கள் முன்வருவதற்கு தயக்கம் காட்டி வருவதால் பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில் தேயிலை தோட்ட வேலைக்கு 5000 சதுர அடியில் 1000 பேரை வேலையில் அமர்த்துவதற்கான நடவடிக்கை அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
செய்தியாளர்: அபினேஷ்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.