பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், கடம்பூர் ராஜு கோகுல இந்திரா மற்றும் பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்," பெரியார் பல்கலைக்கழகத்தில் கேட்கப்பட்ட சாதிய கேள்விக்கு திராவிட மாடல் அரசில் இது போன்றுதான் இருக்கும். எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் இதை கவனித்திருக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்று தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் புத்தியுள்ள அரசு இதை செய்யும். இந்த அரசு புத்தி இல்லாத அரசு” என்று விமர்சித்தார்.
மேலும், “ ஓ.பி.எஸ் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு தேதி குறிப்பிட்டிருக்கிறது. அதைக்கூட கவனிக்காத அளவில் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். கட்சியிலிருந்து நீக்குவதற்கான அதிகாரம் இடைக்கால பொதுச் செயலாளருக்குதான் உள்ளது. ஆகையால் அவரின் நீக்கம் செல்லாது” என்று தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசியவர், “ ஓபிஎஸ் தரப்பினர் தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக கூறுவது ஒரு கேலிக்கூத்தாகவே இருக்கிறது, அவர் எங்களை கட்சியிலிருந்து நீக்கியது என்பது ஒரு காமெடியாகவே பார்க்கப்படுகிறது. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் எனக் கூறுவது போல் தன்னை நீக்கிய போது கூட கொந்தளிக்காத ஓபிஎஸ் தன் மகனை நீக்கியதற்கு கொந்தளிக்கிறார். நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற முயற்சிக்காமல் தன் மகனை மட்டுமே வெற்றி பெற செய்தார் ஓபிஎஸ்.
கட்சி விரோதமாக செயல்பட்டவர்களைதான் கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறோம். உங்கள் கட்சியில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யாரும் கருத்து கூற தேவையில்லை என முரசொலி ஓ.பி.ரவீந்திரநாத் நீக்கம் குறித்த கருத்துக்கு பதிலளித்தார்.
கட்சித் தொண்டர்கள் மனவருத்தம் அடையும் விதமாக ஓபிஎஸ் செயல்பட்டுள்ளார். உட்கட்சி விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று தொண்டர்களை மன வருத்தத்தில் ஆழ்த்தியவர். அவர் திரும்பி வந்தால் சேர்த்து கொள்வது குறித்து இப்பொழுது கூற முடியாது” என தெரிவித்தார்.
Also see...கடலூர் மேயரிடம் நிர்வாக திறன் இல்லை - முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்
மேலும் பாஜகவில் ஓபிஎஸ் இணைவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ் தற்போது அதிமுகவில் இல்லை. அவர் எந்த கட்சிக்கு சென்றாலும் எங்களுக்கு கவலை இல்லை என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Chennai, Minister Jayakumar, OPS