முகப்பு /செய்தி /சென்னை / மாண்டஸ் புயல் தாக்கம்... வண்டலூர் பூங்காவில் வேறோடு சாய்ந்த ராட்சத மரங்கள்

மாண்டஸ் புயல் தாக்கம்... வண்டலூர் பூங்காவில் வேறோடு சாய்ந்த ராட்சத மரங்கள்

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

மாண்டஸ்  புயலினால் வண்டலூரில் உள்ள விலங்குகளுக்கு எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாண்டஸ் புயலினால்  ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உயிரியல் பூங்காவில் மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக 10க்கும் மேற்பட்ட ராட்சத மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளது என்றும் இதில் பூங்காவின் ஒருபக்கம் சுற்று சுவரும் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இயந்திர ரம்பங்கள் மூலம் மரங்களை துண்டுகளாக அறுத்து அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதால்  இன்று பராமரிப்பு பணிகளுக்காக பூங்கா மூடப்பட்டதாக கூறினார்.

இந்தியாவிலேயே ஒரு பழமையான பூங்கா இங்கு சுற்றுச் சுவர்கள் அனைத்தும் கட்டப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியுள்ளது. இதனால் மாண்டஸ் புயலினால் இங்கு மரங்கள் விழுந்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்தவுடன் அமைச்சர் என்ற முறையில் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்காக இங்கு வந்து ஆய்வு செய்தேன் என்றார்.

இதையும் படிங்க: Cyclone Mandous : மாண்டஸ் ஆடிய கோரத்தாண்டவம்... புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒரு பார்வை..

மேலும் பூங்கா வளாகத்தில் உள்ளே உள்ள அலுவலகம் பின்னால் இருக்கின்ற மதில் சுவர் சேதமடைந்துள்ளது.அது உடனடியாக சரி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது எனவே விரைவில் அது சரி செய்யப்படும் என்றார்.

புயலினால் விலங்குகளுக்கு எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை, மிருகங்கள் தங்கி இருக்கும் கூண்டுகளுக்கும் எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை, மரங்கள் விழுந்ததில் மதில் சுவர் மட்டுமே சேதம் அடைந்துள்ளது மற்றபடி வேறு பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.இந்தியாவிலேயே நம்பர் ஒன் பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது என கூறினார்.

செய்தியாளர்- சுரேஷ்

First published:

Tags: Cyclone Mandous, Vandaloor zoo