அனுமதியின்றி வெளிநாட்டு கிளிகள் வளர்த்ததன் காரணமாக நடிகர் ரோபோ சங்கருக்கு வனத்துறையினர் ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
நடிகர் ரோபோ சங்கர் சென்னையில் உள்ள தனது வீட்டில் இரண்டு அலெக்ஸாண்ட்ரா கிளிகளை வளர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக யாரோ அளித்த புகாரின் பேரில் வனத்துறையினர் ரோபோ சங்கர் வீட்டை சோதனை செய்தனர்.
அனுமதியின்றி கிளிகளை வளர்த்ததாகக் கூறி அவற்றை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 2 கிளிகளும் கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் உரிய அனுமதி பெறாமல், வெளிநாட்டு நக கிளிகளை வளர்த்தாக கூறி ரோபோ சங்கருக்கு ரூ. 2.5 லட்சம் அபராதம் விதித்தனர்.
யூடியூபில் பதிவிட்ட ஹோம் டூர் வீடியோவில் கிளிகள் தொடர்பாக தகவல் வெளியானதால் இது குறித்து வனத்துறைக்கு யாரோ புகாரளித்துள்ளனர். அதன்படியே தற்போது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Forest Department, Pet animals, Robo Shankar