ஹோம் /நியூஸ் /சென்னை /

'செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. மருத்துவர்களை காணோம்' - சென்னை மாணவி மரணத்தால் தலைமறைவான டாக்டர்ஸ்!

'செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. மருத்துவர்களை காணோம்' - சென்னை மாணவி மரணத்தால் தலைமறைவான டாக்டர்ஸ்!

பிரியா

பிரியா

இடைநீக்க உத்தரவை நேரில் வழங்க சென்றபோது இருவரும் தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு பேருடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

    தவறான சிகிச்சையில் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் புகாரிற்கு உள்ளான மருத்துவர்கள் சோமசுந்தரம், பால்ராம் சங்கர் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.

    சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் 17 வயது மாணவி பிரியா கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைந்துவந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த இவர், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்சியும் பெற்று வந்தார்.

    இந்த நிலையில், சமீபத்தில் பயிற்சியின் போது இவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார்.

    அப்போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி தனது வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

    அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர். ஆனால் பிரியாவுக்கு காலில் வலி குறையவில்லை என்றதால், மேல் சிகிச்சைக்காக மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    உருட்டுக்கட்டை தாக்குதல்.. முகமெல்லாம் ரத்தம்.. அடிதடியில் முடிந்த காங்கிரஸ் கூட்டம்.. தலைமை அலுவலகத்தில் பரபரப்பு! (news18.com)

    அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பதால் காலை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர். உயிரை காப்பாற்ற வழியில்லாமல், வேதனையோடு கால்பந்து வீராங்கனையின் கால்களை அகற்ற சம்மதித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கால்கள் அகற்றப்பட்டது.

    தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில், இரத்த நாள சிகிச்சை நிபுணர், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர், மயக்க மருத்துவர், சிறுநீரகவியல் துறை நிபுணர், பொது மருத்துவ சிகிச்சை நிபுணர் அடங்கிய மூத்த மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர்.

    ஆனால் எதிர்பாராத விதமாக அவருடைய உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு சிறுநீரகம், ஈரல் மற்றும் இதயம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனையடுத்து உயிரிழந்த மாணவிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட்டது. மேலும் தவறாக சிகிச்சை அளித்த 2 மருத்துவர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை இடைநீக்கம் செய்தது.

    அதற்கான உத்தரவை நேரில் வழங்க சென்றபோது மருத்துவர்கள் சோமசுந்தரம், பால்ராம் சங்கர் இருவரும் தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு பேருடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

    'இந்திய அணியை காப்பாற்ற ஒரே வழி.. தோனியை களமிறக்குங்க' - பிசிசிஐ முக்கிய ஆலோசனை!? (news18.com)

    மேலும், ஏற்கனவே இயற்கைக்கு மாறான மரணம் என காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை, மூத்த மருத்துவ குழு அறிக்கைக்கு பிறகு காவல்துறை அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என தெரியவந்துள்ளது.

    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Chennai, Govt hospital