ஹோம் /நியூஸ் /சென்னை /

சிறுநீரகம், இதயம் பாதிப்பு.. தசைப்பிடிப்புக்கு சிகிச்சை எடுத்த வீராங்கனை உயிரிழந்தது ஏன்? விளக்கமளித்த அமைச்சர்!

சிறுநீரகம், இதயம் பாதிப்பு.. தசைப்பிடிப்புக்கு சிகிச்சை எடுத்த வீராங்கனை உயிரிழந்தது ஏன்? விளக்கமளித்த அமைச்சர்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவிப்பு.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras] | Chennai

  சென்னையில் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை உயிரிழந்த விவகாரத்தில், மருத்துவர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவிக்கு நல்ல முறையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும் கூட மருத்துவர்களின் கவனகுறைவால் காலில் போட்ட கட்டு மிக அழுத்தமாகி ரத்த ஓட்டத்தை பாதித்துள்ளது. ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டிருப்பதால், ரத்த நாலங்கள் பழுதாகி அவதிக்குள்ளாகியுள்ளார். பிறகு தான் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  முதலமைச்சரின் கவனித்திற்கு சென்ற பிறகு வீராங்கனை பிரியா மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தான் இருந்து வந்துள்ளார். ஆனாலும், இந்த ரத்தநாளங்கள் பழுதாகியதால், நேற்று நள்ளிரவுக்கு மேல் சிறுநீரக பாதிப்பு, ஈரல் பாதிப்பு, இதயம் பாதிப்பு என ஒவ்வொன்றாக செயலிழந்துள்ளதாக கூறினார்.

  இதன் தொடர்ச்சியாக தான் இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விசாரணையில் பெரியார் புறநகர் மருத்துவமனையின் 2 அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், விசாரணை நடத்தப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

  மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாகவும், மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai, Death, Ma subramanian, Rajiv gandhi Hospital