Home /News /chennai /

முதல் முறையாக விமானத்தில் பறக்கிறோம்.. ஈஷா யோகா மையத்திற்கு நன்றி தெரிவித்த பழங்குடியின மக்கள்

முதல் முறையாக விமானத்தில் பறக்கிறோம்.. ஈஷா யோகா மையத்திற்கு நன்றி தெரிவித்த பழங்குடியின மக்கள்

விமானத்தில் பயணம் செய்த மலைவாழ் மக்கள்

விமானத்தில் பயணம் செய்த மலைவாழ் மக்கள்

Isa Yoga Centre : இதுவரை தொலைக்காட்சியிலும் திரைப்படத்திலும் தான் விமானத்தை பார்த்திருக்கோம். முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்தது மிகவும் அற்புதமாக இருந்தது என மலைவாழ் பழங்குடியின மக்கள் தெரிவித்துள்ளனர்.

    கோவையில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்த 41 மலைவாழ் பழங்குடியின மக்கள் சென்னை சுற்றி பார்ப்பதற்கு ஈஷா மையம் ஏற்பாடு செய்துள்ளது. அவர்கள் ஈஷா யோகா மையத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

    கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் ஈசா மையம் சுற்றி  வணிக நிறுவனங்கள் நடத்தியும் ஈஷா மையத்தில் வேலை செய்து வருகின்றனர்.  பேட்டரி வாகனங்கள் இயக்குவது போன்ற பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், 4 மலை கிராம பழங்குடியின பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் தங்களது சொந்த பணத்தில் முதன் முறையாக கோவையில் இருந்து  விமானம் முலம் சென்னை வந்தனர். இவர்களை ஈஷா மையம் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து அழைத்து வந்தது. அவர்கள் சென்னையில் 2 நாள் தங்கி இருந்து சுற்றி பார்த்து கோவைக்கு ரயிலில் செல்ல உள்ளனர்.

    அதன்படி சென்னை வந்த பழங்குடியின மக்கள், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது, ஈஷா யோகா மையத்தை சார்ந்தே  தங்களது வாழ்வாதாரம் இருக்கிறது. ஈஷா மையத்தில் பணி செய்தும் வணிக நிறுவனம் நடத்தியும் வருமானம் ஈட்டி வருகிறோம். தங்களது வாழ்க்கைத் தரம் உயர்ந்து உள்ள நிலையில் தமது சொந்த வருமானத்தில் விமானத்தில் முதன் முறையாக பயணித்தது மகிழ்ச்சி தருவதாக தெரிவித்தனர். அவர்கள் சென்னை, மாமல்லபுரம் ஆகிய இடங்களை சுற்றி பார்த்து விட்டு ரயில் மூலம் கோவை திரும்ப உள்ளனர்.

    மலைவாழ் பழங்குடியின மக்கள்


    வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தை சுற்றியிருக்கும் தாணிகண்டி, மடக்காடு, முள்ளங்காடு, பட்டியார் கோவில்பதி கிராமங்களை சேர்ந்த அந்த 41 பழங்குடி இன மக்கள், இண்டிகோ விமானத்தில் காலை 11:30 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு 12 :45க்கு சென்னை வந்தடைந்தனர்.

    இது குறித்து, “இதுவரை தொலைக்காட்சியிலும் திரைப்படத்திலும் தான் விமானத்தை பார்த்திருக்கோம். முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்தது மிகவும் அற்புதமாக இருந்தது" என்றார் வெள்ளாச்சியம்மா. மடக்காடு கிராமத்தை சேர்ந்த இவர், ஈஷா யோக மையத்திற்கு அருகே உள்ள ஆதியோகி சிலை வளாகத்தில் இளநீர் விற்பனை செய்கிறார்.

    மலைவாழ் பழங்குடியின மக்கள்


    2017ல் திறக்கப்பட்ட ஆதியோகி சிலை அங்குள்ள பழங்குடியினரின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மக்கள் வருகை அதிகரித்ததால் உணவு கடைகளுக்கான தேவை அதிகரித்தது. வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வாழ்ந்து வரும் இந்த பழங்குடி  மக்கள், ஈஷா அவுட்ரீச் தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பிரம்மச்சாரிகளின் உதவியோடு கடைகள் நடத்த தொடங்கினர். இந்த கடைகள் மூலமாக அவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்தார்கள். இந்த கடைகளின் மூலம் ஈட்டிய லாபத்தை கொண்டே இந்த விமான பயணத்தையும் மேற்கொண்டுள்ளனர்.

    மலைவாழ் மக்கள்


    "என் மனைவிக்கு எப்போதும் விமானத்தில பறக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. அதனால் திருப்பதிக்குப் போக நாங்க தயார் பண்ணிட்டு இருந்தோம், அப்பதான் ஈஷா அவுட்ரீச்ச்லிருந்து ஒரு சுவாமி சென்னைக்கு போரதைப் பத்தி சொன்னாங்க. நான் தினமும் அதப்பத்தி கேட்டுட்டே இருப்பேன். என் மனைவி ஆசை நிறைவேறிடிச்சுனு  எனக்கு சந்தோஷமா இருக்கு" என்கிறார் மடக்காடு கிராமத்தை சேர்ந்த மூர்த்தி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    விமானத்தில் பயணம்


    முதல் முறையாக விமான பயணம் செய்யும் இவர்களை சிறப்பித்து வரவேற்கும் விதமாக இண்டிகோ ஏர்லைன்ஸ் கோவை விமான நிலையத்தில் வரவேற்பு பலகை வைத்ததோடு, விமானத்தில் ஏறியதும் விமானி இவர்களை மற்ற பயணிகளுக்கு ஒலி பெருக்கியில் அறிமுகப்படுத்தினார். மேலும் பயணத்தின் பொழுது அனைவருக்கும் சிறப்பான உணவும் வழங்கப்பட்டது.

    Must Read : சம்பள பணம் ரூ.3 லட்சத்துடன் மதுபோதையில் மயங்கிய நபர்... பையை எடுத்து முதியவர் செய்த நெகிழ்ச்சி செயல்

    "இது வெறும் ஆரம்பம் தான்.  ஆதியோகிக்கு வருகின்ற மக்கள் கூட்டம் அதிகமாகும். அதனால் அடுத்த வருஷம் இன்னும் 100 பேர் விமானத்தில போவோம். இது எங்க எல்லாருடைய ஆசை" என்கிறார் முள்ளாங்காட்டை சேர்ந்த சூரியகுமார்.

    செய்தியாளர் - சுரேஷ் 
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai Airport, Coimbatore, Flight travel, Isha yoga centre

    அடுத்த செய்தி