ஹோம் /நியூஸ் /சென்னை /

என்னென்ன பாதிப்புக்கு எவ்வளவு நிவாரணம்.? அரசு விதியைச் சொல்லி விளக்கம் அளித்த அமைச்சர்!

என்னென்ன பாதிப்புக்கு எவ்வளவு நிவாரணம்.? அரசு விதியைச் சொல்லி விளக்கம் அளித்த அமைச்சர்!

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

"சென்னையில் மழை தண்ணீர் தேங்காமல் இருக்க முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம்."

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  கடந்த 4 நாட்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு விரைவில் நிவாரண தொகை அறிவிக்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

  மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக சென்னை எழிலகத்தில்  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “வடகிழக்கு பருமவழை குறைந்துள்ளது. 3 நாட்களுக்கு பிறகு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  வடகிழக்கு பருவமழைக்கு முன் முதல்வர் எடுத்த தொடர் நடவடிக்கை தான் பொது மக்கள் பாராட்டிற்கு காரணம். இதனால் தான் பாதிப்பு குறைந்துள்ளது. சென்னையில் மழை தண்ணீர் தேங்காமல் இருக்க முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம்.” என தெரிவித்தார்.

  மேலும் நிவாரண தொகை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, அரசு விதியில், வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தால் ரூ. 4800, குடிசை இடிந்திருந்தால் ரூ. 5000, கான்கிரீட் கட்டிடம் இடிந்திருந்தால் ரூ. 95,000  நிவாரணம் என குறிப்பிட்டார்.

  தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்புகள் - நியூஸ் 18 பிரத்யேக கழுகுப்பார்வை காட்சிகள்

  அரசு விதியின் படி நிவாரண தொகை விவரம்

  மேலும், மழை பாதிப்புகளை முதலமைச்சர் முழுவதுமாக ஆய்வு செய்த பின், நிவாரண தொகை குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: CM MK Stalin, Flood, Relief work