Home /News /chennai /

மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால் குவிந்த மக்கள் களைகட்டிய காசிமேடு மீன் சந்தை

மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால் குவிந்த மக்கள் களைகட்டிய காசிமேடு மீன் சந்தை

காசிமேடு மீன் மார்க்கெட்

காசிமேடு மீன் மார்க்கெட்

ஒரு கிலோ வஞ்சிரம் ஆயிரத்து 400 முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரையிலும், வவ்வால் ஆயிரம் முதல் ஆயிரத்து 100 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    மீன்பிடி தடைக்காலம் முடிந்த பின்பு, முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2 மாதங்களுக்குப் பிறகு சென்னை காசிமேடு மீன் சந்தை களைகட்டியது.

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வர 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி, கடந்த  2 மாதங்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் 15 மாவட்ட மீனவர்கள் இருந்து வந்தனர்.  கடந்த 15-ம் தேதி  மீன் பிடி தடைக்காலம் முடிவடைந்ததையொட்டி  மீண்டும் மீன் பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், தடைக் காலம் முடிவடைந்தபின்னர், இன்று முதலாவது ஞாயிற்றுக்கிழமை என்பதால், மீன்களை வாங்க ஏராளமானோர் சென்னை காசிமேடு மீன் சந்தையில் குவிந்துள்ளனர். இவர்களுக்கு வஞ்சிரம் உள்ளிட்ட மீன்கள் குறைந்த அளவிலேயே கிடைத்தன. எனினும், சிறிய அளவிலான மீன்களை அதிகமாக வாங்கி சென்றனர். மீன்களின் வரத்து குறைவாக உள்ளதால் விலை தொடர்ந்து உயர்வாக காணப்படுகிறது.

    மேலும் படிக்க:  மனைவியுடன் சாட்டிங்.. சொல்லியும் அடங்காத நண்பனுக்கு கத்திக்குத்து - கொடைக்கானலில் பரபரப்பு

    இங்கு ஒரு கிலோ வஞ்சிரம் ஆயிரத்து 400 முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரையிலும், வவ்வால் ஆயிரம் முதல் ஆயிரத்து 100 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. சங்கரா 400 முதல் 800 வரையும், தோல் பாறை 350 ரூபாய்க்கும், நெத்திலி 250 முதல் 300 வரைக்கும், காரப்பொடி 100 ரூபாய்க்கும் விற்பனையானது. இறால் 400 முதல் ஆயிரத்து 300 ரூபாயாகவும், நண்டு 400 ரூபாயாகவும் இருந்தது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Fish, Kasimedu

    அடுத்த செய்தி