ஹோம் /நியூஸ் /சென்னை /

மெரினா-கோவளம் கடற்கரை பகுதியை புத்தாக்கம் செய்யும் திட்டம்: மீனவர்கள் எதிர்ப்பு

மெரினா-கோவளம் கடற்கரை பகுதியை புத்தாக்கம் செய்யும் திட்டம்: மீனவர்கள் எதிர்ப்பு

மெரினா கடற்கரை

மெரினா கடற்கரை

Chennai | சென்னை மெரினா - கோவளம் இடையே 30 கிலோ மீட்டர் கடற்கரை பகுதியை புத்தாக்கம் செய்யும் திட்டத்திற்கு மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை மெரினா - கோவளம் இடையே 30 கிலோ மீட்டர் கடற்கரை பகுதியை புத்தாக்கம் செய்ய ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, திட்டத்தை நிறைவேற்ற 17 பேர் கொண்ட குழு அமைத்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டதின் கீழ், மெரினா முதல் கோவளம் வரை உள்ள கடற்கரை பகுதியில் துண்டாகியுள்ள இடங்களை இணைப்பது, கடலை ஒட்டி நடப்பதற்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளாகவும், அதில் கலை, பண்பாடு சார்ந்த நிகழ்வுகளுக்கான  வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பலகைகள் மற்றும் மரக் கட்டைகளில் நடந்து செல்லும் வசதி, சைக்கிள் ஓட்டும் வசதி,  இந்த திட்டத்தின் கீழ் செய்வது என முன்னதாக முடிவு செய்யப்பட்டது.

இதற்கு மீனவ அமைப்பினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, மீனவ கிராமத்திற்கும், கடற்கரைக்கும் ஆன இடைவெளி குறைவாக இருக்கிறது எனவும், இதனால், சில மாதங்களில் கடற்கரையில் படகுகளை நிறுத்துவதற்கும், வலைகளை காய வைப்பதற்கான இடம் குறைவாக இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய திட்டம் கொண்டு வரப்படும் போது, படகுகள் நிறுத்தப்படும் இடங்கள், வலைகள் காய வைக்கக்கூடிய இடங்கள், மீன் அங்காடி இடங்கள் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது எனவும், ஒரு திட்டம் கொண்டு வரும் போது பாரம்பரியமாகத் தொழில் செய்யக்கூடிய மீனவ மக்களின் பிரச்சினையை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மீனவர் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இத்திட்டம் மீனவர்களுக்கு எதிராகத்தான் இருக்கிறது எனவும், கடற்கரையை அழகு படுத்தும் திட்டம் செயல்படுத்தும் போது, மீனவர்களை அப்புறப்படுத்துவதற்கான நிலையும் ஏற்படும் எனவும், மீனவ தொழில் பலநூறு கோடி முதலீட்டில் நடைபெற்று வருவதோடு, அரசிற்கு அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுக்கிறது. அதே போல உணவு தேவையை பூர்த்தி செய்கிறது. எனவே, இந்தத் தொழிலை கட்டமைப்பிற்குள் அரசாங்கம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

இதற்கு முன்பும் இது போல் பல திட்டங்களை கொண்டு வர திட்டமிடப்பட்ட நிலையில், இதில் நிறைய சிக்கல்கள் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அடையாறு கழிமுகம் மேல் பாலத்தை புதுப்பித்து அழகுபடுத்த இத்திட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அங்கு பாலம் கட்டப்பட்டு பின்னர் இயற்கை சீற்றத்தின் போது அது இடிந்த வரலாறுகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அதேபோல், அடையாறு முகத்துவாரம் இரண்டு புறமும் பங்குனி ஆமை குஞ்சு பொறிக்கும் இடம். சட்டப்படி அங்கு எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியாது. அங்கு எந்த பணிகளை மேற்கொண்டாலும் ஆமைகளுக்கு ஆபத்து எனவும் மீனவர்களும் கடல் ஆராய்ச்சியாளர்களும் தெரிவிக்கின்றனர்.

Also see... சேமிப்பு கிடங்குகளில் நெல் மணிகள் ஈரமாகவில்லை: உணவுத்துறை அமைச்சர்

மேலும் கடற்கரை உருவாக பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது எனவும், இயற்கையாக இருப்பதுவே கடலுக்கு அழகு எனவும் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். கடற்கரை என்பது கடல் நீரை, நிலத்தடி நீருடன் கலக்காமல் தடுக்கும் ஒரு அரணாக இருந்து வருகிறது எனவும், அதை பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

First published:

Tags: Chennai, Fisherman, Marina Beach