முகப்பு /செய்தி /சென்னை / தம்பி கொலைக்கு பழிதீர்க்க ஒரு வருடம் காத்திருந்த அண்ணன்.. மீன் வியாபாரி கொலையில் திடுக்கிடும் தகவல்

தம்பி கொலைக்கு பழிதீர்க்க ஒரு வருடம் காத்திருந்த அண்ணன்.. மீன் வியாபாரி கொலையில் திடுக்கிடும் தகவல்

கைதானவர்

கைதானவர்

Crime News : மண்ணிவாக்கத்தில் தம்பி கொலைக்கு பழிக்கு பழி வாங்க ஒரு வருடம் காத்திருந்த அண்ணன் நண்பர்களுடன் சேர்ந்து மீன் வியாபாரியை ஓட ஓட வெட்டி கொலை செய்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் கே.கே. நகர் மேட்டு தெருவை சேர்ந்தவர் பார்த்திபன்(46), இவரது மனைவி ஜனகா(43), இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பார்த்திபன் மற்றும் அவரது மனைவி ஜனகா ஆகிய இருவரும் மண்ணிவாக்கம் ஓட்டேரி D.S.நகர் பகுதியில் மீன் கடை வைத்து நடத்தி வந்தார்.

கடந்த 13ம் தேதி  இருவரும் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது மீன் கடை அருகே அதிவேகமாக கார் ஒன்று வந்து நின்றது. திடீரென காரில் இருந்து வந்த மர்ம கும்பல் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்த பார்த்திபனை சரமாரியாக பட்டா கத்தியால் வெட்டியது.இதில் ரத்தவெள்ளத்தில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இதை தடுக்க சென்ற ஜனகாவையும் அந்த கும்பல் பட்டாக்கத்தியால் தலையில் வெட்டி விட்டு அங்கிருந்து காரில் தப்பிச்சென்றது. உடனே இச்சம்பவம் குறித்து ஓட்டேரி காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர், அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயம் அடைந்த ஜனகாவை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிரிழந்த பார்த்திபன் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் ஓட்டேரி போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். அதில் கொலை செய்யப்பட்ட பார்த்திபன் வீட்டிற்கு அருகில் உள்ள சரவணன் என்பவரின் மகள், மண்ணிவாக்கத்தை சேர்ந்த பிரேம்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், பிரேம்குமார் சரவணன் மகளை அழைத்துக்கொண்டு திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் சென்றபோது சரவணனின் மகளுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கமான அவளுடைய மற்றொரு காதலன் அவனுடைய நண்பர்களுடன் சேர்ந்து பிரேம்குமாரை ஆரம்பாக்கம் அருகில் ஒரு வருடத்திற்கு முன்பு கொலை செய்துள்ளனர். இதனால், கொலை செய்யப்பட்ட பிரேம்குமாரின் அண்ணன் பிரசாந்த் தன் தம்பியின் கொலைக்கு பார்த்திபனும் அவரது மகள்களும் தான் ஸ்கெட்ச் போட்டு கொடுத்தாக நினைத்து பார்த்திபனை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது கொலை குற்றவாளிகள் படப்பை ஆதனூர் அருகே பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் விரைந்து சென்று 6 பேரையும் கைது செய்து ஓட்டேரி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில்.

மண்ணிவாக்கத்தை சேர்ந்த பிரசாத்(22), அஜய் (எ) பப்புலு(22), தினேஷ்(எ) லியோ(28), பிரவீன் (எ) விக்கிஷ்(20) மற்றும் படப்பையை சேர்ந்த பிரதீப்(19), சிங்கப்பெருமாள் கோயிலை சேர்ந்த தனுஷ்குமார்(எ) குமார் (எ) கருப்பு(20) ஆகியோர் என தெரியவந்தது.

பின்னர் அவர்களிடம் இருந்து கார் மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய பட்டாக்கத்திகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர் : சுரேஷ் - சென்னை

First published:

Tags: Chennai, Crime News, Local News